(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைக்கு அமைய நாட்டுக்குள் முதலீடு செய்பவர்களிடம் நூற்றுக்கு 15 சதவீதம் அறவிடுவது நியாயமில்லை. எதிர்காலத்தில் முதலீட்டாளர்கள் வருவது குறைந்துவிடும். அதனால் அரசாங்கம் அமைச்சரவைக்கு அவிவித்து இதில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் எதிர்பார்க்கும் 10 பில்லியன் ரூபாவை எரிபொருளுக்கு 25 சதம் வரி அறவிட்டு பெற்றுக்கொள்ளலானமென புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
வங்குரோத்து அடைந்த இலங்கை இரண்டு வருடங்களில் மறுசீரமைக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் முக்கியமாகும். இந்த மறுசீரமைப்பு தொடர்பில் உலக நாடுகள் எம்மை வியப்புடன் பார்த்து வருகின்றன. ஆனால் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை 2028ஆம் ஆண்டாகும் போது மீண்டும் கடன் செலுத்த வேண்டி இருக்கிறது. அதனை எவ்வாறு செய்யப்போகிறது என்பது தான் கேள்வியாக இருக்கிறது.
2028இல் இருந்து நாங்கள் 3பில்லியன் செலுத்த வேண்டி இருக்கிறது. அதேபோன்று 2028இல் இருந்து 2033 வரை நாங்கள் பெரிஸ் கிளப், இந்தியா, சீனா ஜப்பான் நாடுகளுக்கு மேலும் 3 பில்லியன் செலுத்த வேண்டி இருக்கிறது. அதன் பின்னர் 2033இல் இருந்து மீண்டும் 9 பில்லியன் ரூபா கடன் செலுத்த ஆரம்பிக்கிறது.
அதனால் நாங்கள் 2028, 2033 வரை பார்த்துக்கொண்டிருக்காமல் கடனை அடைப்பதற்கு தேவையான பயணத்தை செல்வதற்கு தற்போது இருந்தே அந்த பயணத்தை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக எமது பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டி இருக்கிறது.ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டி இருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டுவர வேண்டி இருக்கிறது. எமது சுற்றுலா கைத்தொழிலை அபிவிருத்தி செய்ய வேண்டி இருக்கிறது.
நாடு வங்குராேத்து அடைந்த பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின உதவியை பெற்றுக்கொள்வது அவசியமாகும். ஆனால் அவர்கள் தெரிவிக்கும் அனைத்துக்கும் தலையாட்ட தேவையில்லை. 16ஆது தடவை நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடும்போது நான் அப்போது நாட்டின் நிதி அமைச்சராக இருந்தேன். அப்போது பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தேன். அந்த சவால்களுக்கு முகம்கொடுத்துக்கொண்டு, எமது நிலைப்பாட்டை அவர்களுக்கு தெரிவிக்க எங்களுக்கு முடியுமாக இருந்தது.
அதேபோன்று தற்போது அரசாங்கமும் எமது கடன் சுமையை குறைப்பதற்கு ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலமே மேற்கொள்ள முடியும் என்றே நாணய நிதியம் தெரிவிக்கிறது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதேநேரம் எமது நாட்டில் குறைந்தளவிலான முதலீட்டாளர்களே இருக்கின்றனர். கடந்த 9 மாதங்களில் எமது நாட்டுக்கு வந்திருக்கும் முதலீட்டாளர்கள யார்?
ஏற்றுமதி துறை மூலம் 15 சதவீத வருமானத்தை பெற்றுக்கொள்ளும் திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்வைத்திருக்கிறது. இந்த வருமானம் மூலம் 10 பில்லியன் ரூபாவை நாணய நிதியம் எதிர்பார்க்கிறது. இதன் மூலம் எமது தொழில் முயற்சியாளர்களை கஷ்டப்படுத்துவது ஏன் என்றே நாங்கள் நாணய நிதியத்திடம் கேட்கிறோம். அந்த 10 பில்லியனை வேறு வழியில் எங்களுக்கு சேகரித்துக்கொள்ள முடியும். இந்த முறையில் மாற்றம் செய்ய வேண்டும்.
சீன முதலீட்டாளர்கள் எமது நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வரவேண்டும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். அது நல்லது. ஆனால் அவர்களுக்கு எந்த வரி விலக்களிப்பு இல்லாமல் அவர்கள் இங்கு வருவார்கள் என நினைக்கவேண்டாம். நூற்றுக்கு 30 சத வீத வரி செலுத்தி இங்குவந்து முதலீடு செய்ய யாரும் வரமாட்டார்கள் என்பதை நாணய நிதியத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
துறைமுகநகரத்தில் முதலீடு செய்வதற்கு வரி விலக்களிப்பு வழங்கி இருக்கிறது. ஆனால் எமது நாட்டுக்குள் முதலீடு செய்பவர்களிடம் நூற்றுக்கு 15 சத வீதம் அறவிடுவது நியாயமில்லை. அதனால் அரசாங்கம் அமைச்சரவைக்கு அவிவித்து இதில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். எரிபொருளுக்கு 25 சதம் வரி அறவிட்டு, அதன் மூலம் 10 பில்லியனை அரசாங்கம் பிரேரிக்க வேண்டும் என அரசாங்கத்துக்கு ஆலாேசனையாக தெரிவிக்கிறேன்.
2016இல் நாணய நிதியம் முதலீட்டார்களிடமிருந்து 15 வீத வரி அறிவிடுமாறு எம்மை வற்புறுத்தி வந்தது. ஆனால் நாங்கள் அதனை செய்யவில்லை. ஆனால் 2018இல் மங்கள சமரவீர அதனை அமுல்படுத்தினார். ஆனால் 6 மாதங்களில் அதனை நீக்க வேண்டி ஏற்பட்டது. அதனால் இவ்வாறான உயிரை மாய்த்துக்கொள்ளும் நடவடிக்கைகளை அரசாங்கம் செய்யக்கூடாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM