மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம் அறிவிப்போம் - சாகல ரத்நாயக்க

20 Mar, 2025 | 08:39 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களிலும் யானை சின்னத்தில் களமிறங்கவுள்ளது. அடுத்த வாரம் செயற்குழு கூட்டத்தின்போதே கொழும்பு மாநாகர சபை உள்ளிட்ட ஏனைய மாநாகர சபைகளுக்கான மேயர் வேட்பாளர்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (20) வேட்புமனு தாக்கலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களிலும் யானை சின்னத்தில் களமிறங்கவுள்ளது. ஏனைய மாவட்டங்களிலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கின்றோம். இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை மாத்திரமின்றி ஏனைய பல்வேறு கட்சிகளையும் இணைத்துக் கொண்டு களமிறங்குவதற்கு முயற்சித்தோம்.

எவ்வாறிருப்பினும் அந்த முயற்சி தோல்வியடைந்தமையால் யானை சின்னத்தில் களத்தில் இறங்கியுள்ளோம். மக்களுக்கு சேவையாற்றிய பலம் மிக்க குழுக்களையே நாம் களமிறக்கியுள்ளோம். அதற்கமைய இம்முறை சிறந்த வெற்றியைப் பெற முடியும் என்று நம்புகின்றோம்.

வேட்புமனுக்களுக்கு செயற்குழுவின் அங்கீகாரத்தைப் பெறுவதே ஐக்கிய தேசிய கட்சியின் சம்பிரதாயமாகும். அதேபோன்று தான் குழுக்களின் தலைவர்கள், மேயர் வேட்பாளர்களும் நியமிக்கப்படுவர். அடுத்த வாரம் ஐ.தே.க. செயற்குழு கூடி இவை தொடர்பான தீர்மானங்களையும் எடுக்கும். அதற்கமைய உரிய நேரத்தில் இந்த தீர்மானங்கள் தொடர்பில் அறிவிப்போம்.

ரோசி சேனாநாயக்க தேசிய மட்ட அரசியலில் ஈடுபட்டு வருவதால் அவரை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறக்குவதற்கு எதிர்பார்க்கவில்லை. எவ்வாறிருப்பினும் அவர் கொழும்பு மாவட்ட தேர்தல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51