(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
இராணுவத்தில் இருந்து விலகியவர்கள் அனைவரும் பாதாள குழுக்களுடன் தொடர்புக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுவது முறையற்றது. சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான பொது திட்டங்களை வகுக்க வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை ஏற்றுமதியை இலக்காகக் கொண்டுள்ளதா அல்லது சேவை மற்றும் இறக்குமதி இலக்காகக் கொண்டுள்ளதா என்பதை அறிய முடியவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக்கொண்ட நிலையில் இருந்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது.
பொருளாதார வளர்ச்சியை எதிர்வரும் காலங்களில் 7 முதல் 8 சதவீதத்தால் அதிகரித்துக் கொள்வதாக குறிப்பிடப்படுகிறது. வரி அதிகரிப்பின் ஊடாக மாத்திரமே அரச வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.இருப்பினும் அதற்குரிய சிறந்த திட்டங்கள் ஏதும் முன்வைக்கப்படவில்லை
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவு ஒதுக்கீடுகள் மற்றும் அரச செலவுகளை அரசாங்கம் குறைத்துள்ளது. இது தேசிய பொருளாதாரத்துக்கு எவ்வாறு பங்களிப்பு செலுத்தும் என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும். தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட அனைத்து விடயங்களையும் பொருளாதார கட்டமைப்புக்குள் உட்படுத்திக் கொள்ள முடியாது என்பதை அரசாங்கம் தற்போது விளங்கிக்கொண்டுள்ளது.
பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தலைத்தூக்கியதை தொடர்ந்து இராணுவம் மற்றும் பொலிஸ் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தில் இருப்பவர்களில் எவரேனும் முறையற்ற வகையில் செயற்பட்டிருக்கலாம். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள். அதனை விடுத்து ஒட்டுமொத்த இராணுவத்தையும், பொலிஸாரையும் குற்றஞ்சாட்ட வேண்டாம்.
இராணுவத்தில் இருந்து விலகியவர்கள் அனைவரும் பாதாள குழுக்களுடன் தொடர்புக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுவது முறையற்றது. சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான பொது திட்டங்களை வகுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM