(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
பெருந்தோட்ட மக்களின் நிலையான அபிவிருத்திக்கான சிறந்த முன்மொழிவுகள் வரவு, செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனினும் மக்கள் அதிகாரத்தை தமது சிறப்புரிமையாகக் கொண்டவர்களென்றவகையில் வரவு, செலவுத் திட்டத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
எமது அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் ஒருமாத காலமாக நடைபெற்றது. எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் சிறந்த யோசனைகளை முன்வைத்திருந்தார்கள். இருப்பினும் ஒருசிலர் மாறுப்பட்ட நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு கருத்துக்களை குறிப்பிட்டார்கள். இதற்கு வரவு, செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்வு காண முடியாது.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தான் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினருக்கும் நிவாரணமளிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் நிலையான அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மக்கள் வழங்கிய அதிகாரத்தை தமது சிறப்புரிமையாக பயன்படுத்திக் கொண்டவர்கள் வரவு, செலவுத் திட்டம் தொடர்பில் மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். இவற்றை கருத்திற்கொள்ள போவதில்லை.
வேலையில்லாத பட்டதாரிகளின் போராட்டம் பற்றி பேசப்படுகிறது. கடந்த காலங்களில் லொத்தர் சீட்டு வழங்குவதை போன்று பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. இதனால் பட்டதாரிகள் தான் இன்று பாதிக்கப்பட்டுள்ளார்கள். முறையற்ற நியமனங்கள் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாகவே செயற்பட முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM