காசாவில் செவ்வாய்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக கொல்லப்பட்டவர்களில் 7 மாத கர்ப்பிணியொருவரும் அவரது மகனும்உள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது
இது தொடர்பில் ஏபி மேலும் தெரிவித்துள்ளதாவது.
காசாவை சேர்ந்த அப்னன் அல் கானாம் 13 மாதங்களிற்கு முன்னர் போரின் போது தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார்.
அவ்வேளை அவர்கள் தங்கள் வீட்டிலேயே வசித்து வந்தனர்.
இம்முறை அவர் வசந்தகாலத்தில் மீண்டும் பிரசவிக்கயிருந்தார்.இந்த முறை அவர் அழுக்குமிகுந்த கூடாரத்தில் வசித்துவந்தார்.
பலவீனமான போர்நிறுத்தம் ஒரளவு அமைதியை கொண்டுவந்திருந்தது.
எனினும் செவ்வாய்கிழமை அதிகாலைக்கு முன்னர் இஸ்ரேலின் விமானதாக்குதல்கள்,அந்த குடும்பம் வாழ்ந்த கூடாரத்தை தாக்கின,ஏழு மாத கர்ப்பிணியான அப்னன் அல் கானமும், அவரது இளைய மகன் முகமட்டும் கொல்லப்பட்டனர்.
காசாபள்ளத்தாக்கு மீது இஸ்ரேல் மேற்கொண்ட எதிர்பாராத தாக்குதல் காரணமாக கொல்லப்பட்ட 400 பேரில் அவர்களும் உள்ளனர்.கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் பெண்களும் குழந்தைகளும் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
காசாவின் தென்பகுதி நகரமான கான் யூனிஸ் மருத்துவமனையின் பிரேத அறையில் தனது மகனின் சிறிய உடலை போர்வையால் போர்த்தி தூக்கியபடி இது தான் அவர்களின் தாக்குதல் என்றார் அல அபு ஹெலால்.
மகன் யுத்தத்தின்போது மிகவும் நெருக்கடியான தருணத்தில் பிறந்து யுத்தத்தில் தியாகியானான் என்றார் அவர் .
ஜனவரி மாத நடுப்பகுதியில் தொடங்கிய போர் நிறுத்தத்தை இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்சிதறடித்தது. மேலும் 15 மாத குண்டுவீச்சு .தரைவழித் தாக்குதல் .சிதறல் மற்றும் பஞ்சத்திற்குப் பிறகு தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு சிறு வாய்ப்பிற்காக காத்திருந்த பாலஸ்தீனியர்களை திகைக்க வைத்தது.
காசாவின் தெற்கு நகரமான ரஃபாவில் உள்ள குடும்பத்தின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது கான் யூனிஸுக்கு வெளியே இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான பரந்த முகாமான முவாசியில் உள்ள குடும்பத்தின் கூடாரத்தைத் இஸ்ரேல் தாக்கியதாக அபு ஹெலால் கூறினார்.
ரஃபாவில் உள்ள அவர்களின் வீடு போரின் போது சேதமடைந்தது மேலும் அது கொள்ளையடிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த அதைச் சரிபார்க்க விரும்பினார்.
20 வயதான அல்-கானம் மற்றும் முகமது ஆகியோர் முவாசியில் தங்கியிருந்தனர். "அவர்கள் சென்று என்னை தனியாக விட்டுவிட்டார்கள்" என்று அவர் கூறினார். "பிறக்காத குழந்தையும் இறந்துவிட்டது."
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM