யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி ஒதுக்கீடு எந்த வகையில் நியாயம் - ஞானமுத்து சிறிநேசன்

20 Mar, 2025 | 04:01 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

முல்லைத்தீவில் இரண்டு மனிதர்களுக்கு ஒரு படை என்ற ரீதியிலும், யாழ்ப்பாணத்தில் 14 மனிதர்களுக்கு ஒரு படை என்ற விகிதத்திலும் படை குவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி எந்த வகையில் நியாயமாகும். 

யுத்தம் முடிந்தால் நன்மை கிடைக்கும் என்று நம்பியிருந்த மக்களுக்கு குண்டு விழாத  நாட்டில் வரவு,செலவுத் திட்ட துண்டுவிழும் தொகை அதிகரித்து செல்வதையே காண முடிகிறதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ளபோதும் நாங்கள் அபிவிருத்தி விடயத்தில் பின்நோக்கியே போகின்றோம். நாட்டில் குண்டு விழாமல் இருந்தாலும் வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. நாட்டில் அழிவுகளை ஏற்படுத்திய விடயமாக யுத்தம் உள்ளது. இதற்காக ஆயுதங்களை கொள்வனவு செய்த போதும், படையினரை பராமரிக்கவும் ஒதுக்கப்படும் நிதி உச்சயமாக இருந்தது.  

இந்நிலையில் யுத்தம் முடிந்துவிட்டால் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு குறையும் என்றும் அந்த நிதியின் ஊடாக ஆக்கத்திறன் அபிவிருத்திகளுக்கு அதிகளவான நிதியை ஒதுக்க முடியும் என்றும் கூறினர். ஆனால், யுத்தம் முடிவடைந்துள்ள போதும் கடந்த முறையை விடவும் இம்முறை துண்டுவிழும் தொகை 160 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.

இதேவேளை இந்தியா மற்றும் பிரிட்டனில் படைகளின் எண்ணிக்கையுடன் அந்நாட்டு மக்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் எமது நாட்டில் காணப்படும் படையின் அளவு அதிகமாகவே உள்ளது. இங்கே முல்லைத்தீவில் இரண்டு மனிதர்களுக்கு ஒரு படை என்ற ரீதியிலும்,  யாழ்ப்பாணத்தில் 14 மனிதர்களுக்கு ஒரு படை என்ற விகிதத்தில் படை குவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி எந்த வகையில் நியாயமாகும் என்பதனை கேட்டுக்கொள்கின்றேன். யுத்தம் முடிந்தால் நன்மை கிடைக்கும் என்று நம்பியிருந்த மக்களுக்கு குண்டு விழாத நாட்டில் வரவு, செலவுத் திட்ட துண்டுவிழும் தொகை அதிகரித்து செல்வதையே காண முடியுமாக இருக்கின்றது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில். 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர்...

2025-04-30 02:57:51
news-image

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர்...

2025-04-30 01:48:14
news-image

மே தினத்தன்று பிரதான அரசியல் கட்சிகள்...

2025-04-29 21:29:39
news-image

குழந்தைகளின் மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனை...

2025-04-29 17:31:04
news-image

மின்சார செலவுகள் மற்றும் விலை நிர்ணயம்...

2025-04-30 02:54:21
news-image

ரணிலின் சமூக வலைத்தளங்களிலிருந்தே ஜனாதிபதி தகவல்களைப்...

2025-04-29 17:24:41
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு...

2025-04-29 19:00:38
news-image

வடக்கு கரையோர பிரதேசங்களில்  போதைப்பொருள் பாவனை...

2025-04-29 21:18:09
news-image

கொழும்பை சுத்தமான நவீன நகரமாக மாற்றுவோம்...

2025-04-29 21:24:23
news-image

கடந்த தேர்தல்களில் அசெளகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை...

2025-04-29 17:33:26
news-image

வில்பத்து தேசிய பூங்காவில் ஆமைகளை பிடிக்க...

2025-04-29 17:16:00
news-image

சந்தேகத்தின் கைதுசெய்ய நபரை ஈவிரக்கமின்றி தாக்கிய...

2025-04-29 17:27:56