(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல், வாங்கலில் அர்ஜூன அலோசியஸிடமிருந்து நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பெயர் விபரங்களை வெகுவிரைவில் வெளியிடுவோம். வரலாற்றை மறந்து செயற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பிணைமுறி மோசடியுடன தொடர்புடைய அறிக்கையில் அடிக்குறிப்பு எழுதியவர்கள் பற்றி ஓரிரு விடயங்களை குறிப்பிட்டிருந்தார். முழுமையாக பெயர் விபரங்களை வெளியிட வேண்டும்.
பிணைமுறி மோசடி விவகாரம் கடந்த காலங்களில் பரவலாக பேசப்பட்டது. அலோசியஸ் மற்றும் அவரது தந்தை ஆகியோர் கைச்சாத்திட்ட 156 காசோலைகளில் தனியார் வங்கி ஒன்றின் ஊடாக நிதி பரிமாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அலோசியஸிடமிருந்து நேரடியாக நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நபருக்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து மதுபான நிலையங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் குறித்த மதுபான நிலையத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்துள்ளார்கள். ஆகவே, மதுபான நிலையத்தின் உரிமையாளர்கள் எதிர்வரும் காலங்களில் சாட்சி சொல்ல நேரிடும் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய ஹர்ஷ டி சில்வா, நூற்றுக்கு நூறு சதவீதம் நாங்கள் இதற்கு இணக்கம் தெரிவிப்போம். அனைவரையும் பொதுவாக குறிப்பிடாதீர்கள்.இதனால் சிறந்தவர்களும் பாதிக்கப்படுவார்கள். ஆகவே, பணம் பெற்றுக்கொண்டவர்களின் பெயர் பட்டியலை முழுமையாக வெளியிடுங்கள். நான் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவேன் என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க, எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இதற்கு இணக்கம் தெரிவிப்பார் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். அதனால் தான் அவரை மக்கள் மீண்டும் தெரிவு செய்துள்ளார்கள்.
அரசாங்க நிதி தொடர்பான குழுவில் இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் பேச நேரிடும். ஒருசிலர் வரலாற்றை மறந்து விட்டு செயற்பட முயற்சிக்கிறார்கள். மக்களின் நிதியை மோசடி செய்தவர்கள் நிச்சயம் பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM