வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மக்கள் திரண்டு ஆர்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டுவந்து அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு தமிழரசு கட்சி எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்க பட்டிருந்தது.

மாவட்ட செயலகம் முன்பாக கூடிய மக்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக கோசங்களை எழுப்பியும் பதாதைகளை தாங்கியும் வீதியில் ஆர்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இந்த ஆர்பாட்டத்தில் முல்லைத்தீவை பிரதிநிதித்துவபடுத்தும் வடக்கு மாகாண சபை உருப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், ஆண்டியையா புவனேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டு முதலமைச்சருக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.