(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தனியார் துறையின் பங்களிப்புடன் வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்தி 500 தொன் வரை உற்பத்தியை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்காகவுள்ளதோடு தொழிற்சாலையின் 330 ஏக்கர் பரப்பளவு காணியை பயன்படுத்தி பல்வகை உற்பத்தி வலயமாக அதனை உருவாக்குவதற்கும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென கைத்தொழில் அபிவிருத்தி பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நிலையியற் கட்டளை 27 இன் கீழ் 2இல் தமிழரசுக் கட்சி எம்பி எஸ். ஸ்ரீதரன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அரச நிறுவனங்கள் சொச்ச விலைக்கு விற்கப்பட்டும் மூடப்பட்டும் வந்த காலத்தை நாம் காண முடிந்தது. அத்தகைய நிறுவனங்களுக்கு புத்துயிரளிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் திட்டமாகும்.
அந்த வகையில் 330 ஏக்கர் பரப்பளவில் வாழைச்சேனை கடதாசி ஆலை பிரதேசம் அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இந்த தொழிற்சாலை செயலிழந்து காணப்பட்டது.
2020 ஆம் ஆண்டு அந்த தொழிற்சாலையை மீள செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அச்சமயம் அங்கிருந்த இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பயன்படுத்த முடியாத நிலையிலேயே காணப்பட்டன.
அவை அனைத்தும் மீள திருத்தப்பட்டு தற்போது அந்த இயந்திரங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. அந்த தொழிற்சாலையில் இப்போது 200 தொன் கடதாசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தொடர்ச்சியாக அந்த தொழிற்சாலையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளையடுத்து 300 தொன் கடதாசி உற்பத்தியை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.
அத்துடன் மேற்படி தொழிற்சாலைக்கு சொந்தமான காணியை வருமானம் ஈட்டும் வகையில் பயன்படுத்துவதற்கும் கைத்தொழில் அபிவிருத்தி சபை மூலம் அங்கு மேலும் ஒரு கைத்தொழில் உற்பத்தி தொழிற்சாலையை உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
பல்வகை உற்பத்தி வலயமாக அந்தப் பிரதேசத்தை மாற்றுவதற்கும் எதிர்பார்த்து ள்ளோம். மேலும் அங்குள்ள மீதமான இயந்திரங்கள்,உபகரணங்களைத் திருத்தி எதிர்காலத்தில் 500 தொன் கடதாசிகளை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது அங்குள்ள இயந்திரங்கள் பழைமையானவை. புதிய தொழில்நுட்பத்துடன் உற்பத்தியை மேற்கொள்வதற்காக தனியார் துறையின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது மேற்படி தொழிற்சாலையில் 120 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தனியார் துறை பங்காளர்களையும் இணைத்துக் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஊழியர்கள் தொகையை மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படும்.
அத்துடன் கடதாசி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை மீள்சுழற்சி செய்து பயன்படுத்தும் தொழிற்சாலைகளை மட்டக்களப்பில் உருவாக்குவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சு அல்லது நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்குமானால் அதற்கு எமது பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM