தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பாக போட்டியிடவுள்ளது - சிவநேசதுரை சந்திரகாந்தன்

Published By: Digital Desk 2

20 Mar, 2025 | 03:24 PM
image

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பாக போட்டியிடவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

வேட்புமனுக்கள் கையளிக்கும் இறுதி நாளான வியாழக்கிழமை (20) மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் போது, மாவட்ட அரசாங்க அதிபரும்,தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜேஜே.முரளீதரனிடம் வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டன.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் சார்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல்செய்தனர்.

இதேபோன்று ஆளும் தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையிலும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர்அலி தலைமையிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.நளீம் தலைமையில் வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன.

மேலும், ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல்செய்யப்பட்டன.

அத்துடன் ஈபிடிபியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சிவானந்தராஜா தலைமையில் வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டதுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் 11உள்ளுராட்சிமன்றங்களுக்கான வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரு...

2026-09-16 14:56:41
news-image

நாமல் ராஜபக்‌ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

2026-09-16 14:56:09
news-image

யாழ். களப்பில் 9,000 கடல் அட்டைகளுடன்...

2026-09-16 14:55:03
news-image

புதுக்குடியிருப்பில் மணற்கொள்ளை உட்பட சட்டவிரோத செயற்பாடுகள்...

2026-09-16 14:52:16
news-image

கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் நாமல்...

2026-09-16 14:14:14
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத வெளிநாட்டு...

2026-09-16 13:51:46
news-image

மட்டக்களப்பில் சிவஞானம், சுமந்திரன் உட்பட 4...

2026-09-16 12:46:18
news-image

அழைப்பாணையை அறிந்திருந்தும் ஷிரந்தி ராஜபக்‌ஷ நாட்டை...

2026-09-16 12:49:25
news-image

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்காத...

2026-09-16 13:12:57
news-image

மாத இறுதிக்குள் வருமான வரியைச் செலுத்துங்கள்...

2026-09-16 12:44:59
news-image

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர் முழுவதையும் வற்றச்...

2026-09-16 12:12:13
news-image

ஞானசார தேரர் மீதான வழக்கு செப்டெம்பர்...

2026-09-16 12:21:37