''தோன்றின் புக­ழொடு தோன்­றுக அஃதிலார் தோன்­றலின் தோன்­றாமை நன்று"  என்ற வள்­ளுவ வாக்­கினை வாழ்­வி­ய­லோடு மெய்ப்­பிக்க வாழ்ந்­த­வரே வைத்­திய கலா­நிதி திரு­மதி  சுஹா­சினி நடேசன். இத்­த­கைய சிறப்­பிற்கும் பெரு­மைக்கும் உரித்­து­டைய அவரை சந்­தித்த அந்த நாட்கள் என்­வாழ்வில் என்­றுமே மறக்­க­மு­டி­யாது. 

நான் சுமார் பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்னர்  கர்ப்­பப்பை புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்டு மக­ர­கம புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­றுக்­கொண்­டி­ருந்தேன். இதனால் எனது குடும்­பமே அமைதி, நிம்­மதி இழந்து  நோயோடு போரா­டிக்­கொண்­டி­ருந்த காலம்தான் அது. இத்­த­கை­ய­தொரு சந்­தர்ப்­பத்தின்  போது, “ஒரு நாள் எனது கணவர்  அமெ­ரிக்­காவில் உள்ள புற்­றுநோய் தொடர்­பான வைத்­திய நிபுணர் ஒருவர் விடு­மு­றைக்­காக இலங்கை வந்­துள்ளார். அவ­ரிடம் உனது நோய் தொடர்­பாக கூறினேன். அவர் உன்னை அழைத்து வரும்­படி சொன்னார்"  என்று கூறி­ய­தற்­க­மைய இரு­வரும் அவரை சந்­திக்கச் சென்றோம். 

அவரை முதன் முதலில் நான் பார்த்­த­போது ஒரு  கம்­பீ­ர­மான பெண்­ம­ணி­யாக தோற்­ற­ம­ளித்தார். ஆளு­மை­மிக்க ஒரு பார்வை....  அதிலும் ஒரு கனிவு. தமிழும் ஆங்­கி­லமும் கலந்த மொழி­நடை... மருத்­துவ நிபு­ணத்­து­வ­மிக்க கேள்­வி­க்க­ணைகள்... என்­பன அவர் ஒரு மருத்­துவ மேதை என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யது. என்னை  எளி­மை­யான முறையில் விசா­ரித்­த­துடன் எனது  நோய் சம்­பந்­த­மான விப­ரங்­களை கேட்­ட­தோடு வைத்­திய அறிக்கை குறிப்­பு­க­ளையும் பார்த்து விட்டு   அவர் கூறிய வார்த்­தைகள் தான் எனக்கு மீண்டும் ஓர் மறு­வாழ்வு உண்டு என்ற நம்­பிக்­கையை  ஏற்­ப­டுத்­தியது. 

ஆமாம்! இது­வ­ரையில் எத்­த­னையோ வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு சென்­று­விட்டேன். ஆயினும் எனது நோய் தொடர்பில் ஓர் தெளிவான விளக்­க­மின்­றியே இருந்தேன். ஆனால் இவ­ரது வார்த்­தை­களும் விளக்­கங்­களும் ஏனைய மருத்­து­வர்­க­ளி­லி­ருந்து வேறு­பட்­டி­ருந்­தது.  

எனது நோயிற்­கான கார­ணங்கள், இந்­நோயின் தாக்கம் தொடர்பில் நான் கொண்­டி­ருந்த கவ­ன­யீனம் பற்­றியும், எனது நோய் குண­ம­டைய நான் கடைப்­பி­டிக்க வேண்­டிய விப­ரங்­களை பற்­றியும் மிகவும் தெளிவாக எடுத்­து­ரைத்­த­தோடு மட்­டு­மன்றி இந்­நோ­யி­லி­ருந்து நான் மீண்­டு­வர  வழி­காட்­டி­யா­கவும் விளங்­கினார். இவ­ரு­டைய இத்­த­கைய விளக்­கங்கள், விப­ரங்­களை நான் தெரிந்­து­கொண்ட பின்பு தான்இ  இவ­ரு­டைய வைத்­திய நிபு­ணத்­து­வத்­தையும் பாண்­டித்­தி­யத்­தையும் விளங்­கிக்­கொண்டேன்.

 இவர் இலங்­கைக்கு வரும் போதெல்லாம் என்னைப் போன்ற பல நோயா­ளிகள் இவரை  தேடி ஆலோ­ச­னை­க­ளையும் சிகிச்­சை­க­ளையும்  பெற்­றுக்­கொள்­வ­தோடுஇ அவர் எந்த சந்­தர்ப்­பத்­திலும், சூழ்­நி­லை­யிலும் எவ்­வித எதிர்ப்­பார்ப்­பு­மின்றி தனது சேவையை நோயா­ளி­க­ளுக்கு வழங்­கினார். 

இவரைப் போன்ற நிபு­ணத்­துவம் பெற்ற திறமை, அனு­ப­வ­மிக்க வைத்­திய நிபு­ணர்கள் நம் நாட்டில் இல்­லையே என்று பல சந்­தர்ப்­பங்­களில் நான் ஆதங்­கப்­பட்­டுள்ளேன். ஒரு நோயா­ளிக்கு மருந்து மாத்­தி­ரை­க­ளுக்கு அப்பால் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­வதே சிறந்த மருத்­து­வ­மாகும். அத்­த­கைய மகத்­து­வத்தை இவ­ரி­டமே முதன்­மு­தலில் நான் கண்டேன்.  

இப்­ப­டிப்­பட்ட மகத்­தான பெண்­மணி மறைந்­து­விட்டார் என்ற செய்­தியை  நான் பத்­தி­ரிகை வாயி­லாக அறிந்து துக்­கமும் வேத­னையும் அடைந்தேன். அது­மட்­டு­மன்றி நோயியல், முதியோர் வைத்­திய பரா­ம­ரிப்­பியல், உள்­ளக மருத்­து­வ­வியல், நல்­வாழ்வு மற்றும் ஊக்­க­வியல், குரு­தி­யியல் தொடர்­பான ஆய்வு மற்றும் புற்­று­நோ­யியல் ஆகிய ஆறு துறை­களில் நிபு­ணத்­துவம் மிக்க  மருத்­து­வ­ராக அமெ­ரிக்­காவில் திகழ்ந்­துள்ளார்  என்­ப­தையும் பத்­தி­ரி­கையின் வாயி­லாக அறிந்­து­கொண்டேன். இவரின் மறைவு மருத்­துவ உல­கிற்கு ஈடு­செய்­ய­மு­டி­யாத மாபெரும் இழப்­பாகும்.  இவர் இன்னும் சில காலம் எம்­மோடு வாழ்ந்­தி­ருந்தால் என்னை போன்று எத்­த­னையோ நோயா­ளிகள் பயன்­பெற்­றி­ருந்­தி­ருப்­பார்கள். 

எத்­த­னையோ புற்­று­நோ­யா­ளி­க­ளுக்கு உயிர் கொடுத்த இந்த அம்­மையார், பக்­தர்­களின் குறை­களை இறைவன் வாங்­கிக்­கொள்­வது போல தமது நோயா­ளி­களின் புற்­று­நோயை தன­தாக்கி கொண்­டாரோ தெரி­ய­வில்லை. நான் வாழ்­வ­தற்கு நம்­பிக்­கை­யையும் தங்கள் நிபு­ணத்­து­வத்­தையும் வழங்கியுள்ள நீங்கள் இன்று எம்மோடு இல்லையே என்பது என்னால் ஜீரணிக்க முடியாதுள்ளது.  

சிறந்த குடும்ப தலைவியாகவும் தாயாகவும் வழிகாட்டியாகவும் வைத்திய நிபுணராகவும் விளங்கிய இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாருடன் நானும் பங்கெடுத்துக்கொண்டு  அவர்களுக்கு இறைவன் அமைதியையும் சாந்தியையும் தரவேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.

 திருமதி. யோகபதி