(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
வரவு,செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே சிகரெட் வரி திருத்தம் தொடர்பான யோசனைக்கு அனுமதி வழங்கியுள்ளோம். இருப்பினும் இந்த வரி விதித்தல் முறைமை தவறாகும். ஆகவே, பாராளுமன்றத்தின் ஊடாக புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற அமர்வின்போது அரசாங்க நிதி பற்றிய குழுவின் செயலாற்றுகை அறிக்கைகளை சபைக்கு சமர்ப்பித்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
சிகரெட் வரி தொடர்பில் விசேடமாக குறிப்பிட வேண்டும். சிகரெட் வரி திருத்தம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு முதல் தடவையாக அனுமதி கோரப்பட்ட போது அதற்கு அனுமதி வழங்கவில்லை. முறையான தெளிவுப்படுத்தலுடன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தேன்.
இரண்டாவது தடவையாகவும் குழுவுக்கு முன்னிலையான அதிகாரிகள் ஒருசில விடயங்களை சுட்டிக்காட்டினார்கள்.இதற்கமைய வரவு, செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் சிகரெட் வரி திருத்தத்துக்கு அனுமதி வழங்கியுள்ளோம்.
சிகரெட் ஒன்று விற்பனை செய்யப்படும் போது 75சதவீத வரியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார தாபனம் மற்றும் நிதியியல் கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் வரி விகிதம் கடந்த காலங்களில் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஏதேனும் காரணிகளால் சிகரெட் உற்பத்தியில் வரி வருமானம் அரசாங்கத்துக்கு முறையாக கிடைக்கவில்லை ஆனால், உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவில் இலாபமடைந்துள்ளன. இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
சிகரெட் வரி விதிப்பு முற்றிலும் தவறானது. ஆகவே, இந்த வரி விதிப்பு தொடர்பில் புதிதாக சிந்திக்க வேண்டும். பணவீக்க பெறுமானத்துக்கு அடிப்படையில் வரி விதிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. இருப்பினும் இதில் பாரிய குளறுபடிகள் காணப்படுகின்றன. அனைத்து வகையான புகைத்தல் பொருட்களுக்கும் 5.9 சதவீத வரி அறவிடும் போது இயல்பாகவே வரி அறவிடும்போது குளறுபடிகள் தோற்றம் பெறும்.
வரவு, செலவுத் திட்டத்தை நிறைவேற்றுக் கொள்வதற்காகவே சிகரெட் வரி திருத்தம் தொடர்பான யோசனைக்கு அனுமதி வழங்கியுள்ளோம். இருப்பினும் இந்த வரி விதித்தல் முறைமை தவறு ஆகவே, பாராளுமன்றத்தின் ஊடாக புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM