இன்றைய இளைய தலைமுறையினர் கடுமையாக உழைத்தாலும் புத்திசாலித்தனமாக உழைத்தாலும் உணவு மற்றும் வாழ்க்கை நடைமுறையில் சுவைக்கும் விருப்பத்துக்கும் முன்னுரிமை கொடுப்பதால் உடலின் எடை அதிகரிக்கிறது.
சிலர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையின்படியான உடல் எடையைக் கொண்டிருக்காமல் அதிக உடல் எடையுடனும் உடற் பருமனுடனும் இருக்கிறார்கள். உடற்பருமன் ஏற்பட்டால் அதாவது, உங்களுடைய உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைவிட 25 கிலோ எடை அதிகமாக இருந்தால் அதனை சுகாதார துறையினர் உடற்பருமன் என குறிப்பிடுகிறார்கள். இத்தகைய உடற்பருமன் கொண்டவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என்று வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
பைக்கற்றுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் ஆகியவற்றை தொடர்ச்சியாகவும் அகால வேளைகளிலும் பசியாறுவதால் உடற்பருமன் உண்டாகிறது. இந்தத் தருணத்தில் உடல் உறுப்புகள் இயல்பான அளவை விட அதிக அளவுக்கு வீக்கம் அடைகின்றன. இதனால் உடலில் உள்ள உறுப்புகள் பலவீனம் அடைவதற்கும் நோய் தொற்று ஏற்படுவதற்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உடற்பருமன் ஒரு முக்கிய காரணியாக திகழ்கிறது.
இந்தத் தருணத்தில் புற்றுநோய்க்கும் உடல் பருமனுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். குறிப்பாக, உடல் பருமன் காரணமாக உடலில் ஏற்படும் வீக்கங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீர்குலைக்கின்றன. இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. குளறுபடிகளை விளைவிக்கின்றன. இதன் காரணமாக எம்முடைய உடலில் கார்சினோமோ செல்கள் உருவாகின்றன. அதன் பிறகு இந்த செல்கள் மியூட்டேசன் எனப்படும் மரபணு மாற்றம் பெற்று புற்றுநோயின் பாதிப்பை உறுதிப்படுத்துகிறது.
உடற்பருமன் ஏற்பட்டவர்களுக்கு உணவுக் குழாய் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், கணைய புற்றுநோய், பித்தப்பை புற்றுநோய் ஆகிய புற்றுநோய் பாதிப்புகளையும் பெண்மணிகளிடத்தில் மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இத்தகைய புற்றுநோய்களுக்கு உடற்பருமன் தான் தொடக்கப்புள்ளி என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
இதன் காரணமாக உடல் பருமன் வராமல் தற்காத்துக்கொள்ள வேண்டும். உடற்பருமன் ஏற்பட்டாலும் வைத்திய நிபுணர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சை - வாழ்க்கை முறை - உணவு முறை ஆகியவறறை உறுதியாக கடைபிடித்து, புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் ஆயுள் முழுவதும் உடல் எடையை சீராக பராமரிப்பதில் தீவிர கவனம்கொள்ள வேண்டும்.
வைத்தியர் சஞ்சய் வர்மா
தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM