அவிசாவளை சீரடி சாயி பாபா ஆலய பிராண பிரதிஷ்டை

Published By: Digital Desk 2

20 Mar, 2025 | 05:21 PM
image

அவிசாவளை புவக்பிட்டிய, எல்ஸ்டன் தோட்டப் பகுதியில் அமைந்துள்ள சத்குரு சீரடி சாயி பாபா ஆசிரமம், தியான மற்றும் சமூக சேவை மையம் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு  மார்ச் மாதம்  9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ஆலய திறப்பு விழா நடைபெற்றது.

ஸ்ரீ சாயி நிலையத்தில் அனுசரணையில் சீரடி சாய் பாபாவின்  நாமத்தில் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிக பிரம்மாண்டமான ஆசிரமம், தியான மண்டபம், சமூக சேவை மையம் ஆகிய தொகுதிகளை கொண்டுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது.

இவ் விழாவில்,விநாயகர் பூஜை, ருத்ர பூஜை மற்றும் விசேட ஹோம பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கும்பு ஊர்வலம் நடைபெற்று விநாயகர் கோவிலின் கலசங்களுக்கும் மற்றும் விநாயகருக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனையடுத்து, சீரடி சாய் பாபாவின் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.

உலக சாயி அறக்கட்டளையின் ஸ்தாபகர் கலாநிதி சந்திரபானு சத்பதி தலைமையில் பிராண பிரதிஷ்டைக்கான கிரியைகள் நடைபெற்றன.

அத்தோடு, மும்பையில் இருந்து வருகை தந்த சத்யசாயி பாபாவின் நேரடி ஆசி பெற்ற உலகப்புகழ் சாயி பஜன் பாடகர் ரவிராஜ்நாசேரி சிறப்பு பஜனை நிகழ்வை வழங்கினார்.

சீரடி சாயி பாபாவின் நாமத்தில், இலங்கை திருநாட்டிலேயே மிகப்பிரம்மாண்டமான ஆலயம், ஆசிரமம், சமூக சேவை மையமாக அவிசாவளை புவக்பிட்டிய நகரத்தில், எல்ஸ்டன் தோட்டத்தில் தலை நிமிர்ந்து வருகிறது இந்த ஆலயம்.

இந்த அவிசாவளை சீரடி பாபா ஆலயமானது, பத்து ஆண்டுகளுக்கு முன், சில பெரியோர்களின் கனவுகளில், ஒரே சமயம் எழுந்த சீரடி சாயி பாபாவின் கட்டளையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட கைங்கரியம் ஆகும்.  

மறைந்த தேசபந்து ஈஸ்வரனின் தலைமையில், ஆலயத்தை அமைப்பதற்கான செயற்பாடுகள் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் ஆலயத்தை அமைப்பதற்கு தகுதியான இடத்தை கண்டுபிடிக்க பெருமுயற்சி எடுக்கப்பட்டது. 

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பேருதவியாலும், முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் ஒத்துழைப்பினாலும், மற்றும் பலருடைய தொண்டினாலும், இந்த மலையடிவார பிரதேசம், பாபாவினால் தனது இலங்கைக்கான முக்கியமான தளமாக தெரிவு செய்யப்பட்டு ஆலய நிர்மாண வரைபடங்கள் தயார் செய்யப்பட்டன.

அவரமைத்த இந்தப் பணியை, சீரடி சாயி பாபா அறக்கட்டளையினர் 7 வருடங்களுக்கு முன்பாக அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தனர்.

இப்பெரும் பணியை தலைமை தாங்கி, தலைமேற்கோண்டு ஈஸ்வரனின் சகோதரர் தெய்வநாயகம் வீரபாகு நிறைவேற்றி வருகிறார். 

எப்படி ரம்பொடை ஆஞ்சநேயர் ஆலயம், ரம்பொடகலை (குருநாகல்) 67.5 அடி சமாதி புத்தர் கற்சிலை போன்ற பாரிய ஆன்மிக வரலாற்று சின்னங்களை ஈஸ்வரன் நிறுவினாரோ, அதே சிறப்புடனும் அர்ப்பணிப்புடனும் அவிசாவளையில் இந்த சீரடி பாபாவின் பெயரிலான ஆலயம், ஆசிரமம், தியான, சமூக சேவை மையமாக மிக நேர்த்தியான முறையில் அமைந்துள்ளது.

தென்னிந்திய சிற்பக் கலைஞர் ஜெயகுமாரின் தலைமையில், ஆறு சிற்பிகள் தங்களின் இரண்டு வருட உழைப்பினை இத்திருப்பணிக்காக தந்துள்ளார்கள். புகழ் பூத்த கட்டட கலைஞரான ராஜு சிவராமன் தலைமையில் பல நம்நாட்டு கட்டட கலைஞர்களின் திறனிலும் உலகெங்குமுள்ள ஆன்மிக அன்பர்களின் அனுசரணையிலும் இந்த பிரம்மாண்டமான ஆலயம் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பூஜை நிகழ்வுகளில்,ஸ்ரீ சீரடி சாய் பாபா நிலையத்தின் உறுப்பினர் கணேஷ் ஈஸ்வரன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சாய் பக்தர்கள், ஆன்மீக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பீலியடி நடன காளி அம்மன் ஆலயத்தின்...

2025-04-20 17:45:51
news-image

கொழும்பில் தேசிய மக்கள் சக்தியின் காரியாலயம்...

2025-04-19 17:40:29
news-image

 "காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்"...

2025-04-19 14:33:42
news-image

தமிழ்நாடு ஆளுநர் விருதைப் பெற்ற சொற்பொழிவாளர்...

2025-04-19 14:14:04
news-image

அன்னை பூபதியின் 37 ஆவது நினைவுதினம்...

2025-04-19 12:29:15
news-image

கொழும்பு விவேகானந்தா சபையின் ஆசிரிய வாண்மை...

2025-04-19 11:17:03
news-image

இலங்கையில் முதன் முறையாக நடைபெறவுள்ளது Media...

2025-04-18 11:57:34
news-image

அகிலமெங்கும் ஒலித்திடும் சிவநெறிய திருமுறை விண்ணப்பம்...

2025-04-17 17:42:43
news-image

தெஹிவளை விஷ்ணு கோயிலில் புதுவருட தின...

2025-04-17 15:55:25
news-image

ஜேர்மனியில் சர்வதேச விருது விழா

2025-04-17 18:58:20
news-image

'இயேசு ஜீவிக்கிறார்“ சர்வதேச சுவிசேஷ பணிமனையின்...

2025-04-16 12:54:39
news-image

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ முத்து...

2025-04-16 07:03:22