“ரன் மல்லி”யின் நண்பன் ஹெரோயினுடன் கைது

20 Mar, 2025 | 01:11 PM
image

மாத்தறை - திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊருகமுவ பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று புதன்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்ஹேனகொட, ஊருகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து 33 கிலோ 106 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட  சந்தேக நபர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள போதைப்பொருள் கடத்தல் காரரான ”ரன் மல்லி” என்பவரின் நண்பன் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர், ரன் மல்லிக்குச் சொந்தமான போதைப்பொருட்களை பல்வேறு பிரதேசங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (20) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெப் வாகனம் குடைசாய்ந்து விபத்து -...

2025-04-21 10:57:11
news-image

மட்டக்களப்பு சீயோன் தேவாலய குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின்...

2025-04-21 11:29:24
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்ற தேசிய...

2025-04-21 11:22:39
news-image

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 174...

2025-04-21 10:37:57
news-image

சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு

2025-04-21 11:16:44
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்துவதற்கு தற்காலிக தடைவிதிக்கவேண்டும்...

2025-04-21 11:05:15
news-image

மைத்திரிபால சிறிசேன சி.ஐ.டி.யில் ஆஜர் !

2025-04-21 10:52:39
news-image

ஹட்டனில் லொறி விபத்து - மூவர்...

2025-04-21 10:27:27
news-image

மதுபான களியாட்டத்தில் தகராறு ; கூரிய...

2025-04-21 10:22:17
news-image

தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது...

2025-04-21 10:27:18
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167...

2025-04-21 09:57:23
news-image

பொலன்னறுவையில் கார் - மோட்டார் சைக்கிள்...

2025-04-21 09:39:54