வடக்கு மாகாண முத­ல்வர் சி.வி.விக்­னேஸ்­வரன் தனது முத­ல­மைச்சருக்குரிய கடமையை உரியமுறையில்  நிறை­வேற்­ற­வில்லை.   எனவே தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு  அவரை நீக்­கி­விட்டு  புதிய ஒரு­வரை   முத­ல­மைச்­ச­ராக நிய­மிப்­பதே சாலப்­பொ­ருத்­த­மாக அமையும். மக்­க­ளுக்கு சேவை­யாற்­று­வ­தற்கு பதி­லாக சி.வி. விக்­­னேஸ்­வரன்   இன­வாத செயற்­பாட்­டையே கடந்த காலம் முழு­வதும் முன்­னெ­டுத்­துள்ளார்  என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும்  இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

 

நீதி­பதிஇ நீதி­ய­ரசர் என்­ற­வ­கையில்   தான்  பயன்­ப­டுத்­திய திற­மை­யையும்  மக்­க­ளிடம்  காட்­டிய செவி­ம­டுத்­த­லையும்  விக்­கி­னேஸ்­வரன் முத­ல­மைச்சர் பத­வியில்   வெளிக்­காட்­ட­வில்லை. எனவே  அவர்  அந்­தப்­ப­த­விக்கு பொருத்­த­மா­னவர் அல்ல என்றும்   டிலான் பெரேரா சுட்­டிக்­காட்­டினார். 

வட­மா­கா­ண­ ச­பையில் ஏற்­பட்­டுள்ள  நிலைமை தொடர்பில்  கேச­ரிக்கு  விப­ரிக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர்  இது­ தொ­டர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்,

தெற்கில்   கூட்டு எதி­ர­ணி­யினர்   மற்றும் உதய கம்­மன்­பில, தினேஷ் குண­வர்த்­தன போன்றோர்  இன­வாத செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். அவர்­க­ளுக்கு சற்றும் குறை­யாத வகையில்  வடக்கில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் மற்றும்   சிவா­ஜி­லிங்கம்  உள்­ளிட்டோர்   இனவாத செயற்­பா­டு­களை  முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.   

விக்­னேஸ்­வ­ரனை முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு அறி­வித்தபோது இந்த நாட்டின் மிதவாத தலை­வர்கள் அனை­வரும் அவரை வர­வேற்­றனர். அவர் ஒரு சிறந்த தலை­மைத்­து­வத்தை வழங்­குவார் என்றும் சம்­பந்­த­ னுக்குப் பின்னர் கூட்­ட­மைப்பின் தலை மைப் பொறுப்பை ஏற்பார் என்றும் எதிர்­பார்க்­கப்­பட்­டது. 

ஆனால்  விக்­னேஸ்­வரன் முத­ல­மைச்சர் ஆகிய பின்னர்   இன­வா­தத்தை கையில் எடுத்தார்.  அது­மட்­டு­மன்றி  வடக்கு மக்­க­ளுக்­காக  எத­னையும் செய்­ய­வில்லை.  வட­மா­கா­ண­ச­பைக்கு ஒதுக்­கப்­பட்ட நிதி  முழு­வ­து­மாக செல­வி­டப்­ப­டாத நிலைமை காணப்பட்­டது.  

தெற்கின் இன­வா­தத்­திற்கு  தீனி­போடும் செயற்­பா­டு­க­ளையே விக்­னேஸ்­வரன் முன்­னெ­டுத்தார். எனவே  என்னைப் பொறுத்­த­வ­ரையில்  விக்­னேஸ்­வ­ரனை நீக்­கி­விட்டு   நன்­றாக  பணி­யாற்­றக்­கூ­டிய ஒரு­வரை  முத­ல­மைச்­ச­ராக  நிய­மிப்­பது சரி­யான  தெரி­வாக இருக்கும்.  இதனை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு செய்­யலாம். 

நாங்கள் மாகா­ண ­ச­பை­க­ளுக்கு  காணி, மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்கள் கூட வழங்­கப்­ப­ட ­வேண்டும் என்­பதை  வலி­யு­றுத்தி வரு­கின்றோம். அவ்­வாறு நாங்கள்  செயற்­ப­டும்­போது மறு­புறம்  இந்த செயற்­பாட்டில் வட­மா­கா­ண­சபை வெற்­றி­பெ­ற­வில்லை.  மக்­க­ளுக்­கு­ரிய தேவை­களை நிறை­ வேற்­று­வதில் வட­மா­கா­ண­சபை அடைந்­துள்ள மட்டம் திருப்­தி­க­ர­மா­ன­தாக இல்லை. 

வரு­டத்­திற்­காக ஒ­துக்­கப்­பட்ட முழு­மை­யான நிதி­யைக்­கூட   அவர்கள்   செல­வ­ழிக்­க­வில்லை. அப்­ப­டி­யாயின் மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வில்லை என்­பதே அர்த்­த­மாகும்.   அதனால்   என்னுடைய நிலைப்­பா­டா­னது வடக்கு முத­ல­மைச்­ச­ராக செயற்­றி­ற­னுடன் பணி­யாற்றும் ஒரு­வரை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு நிய­மிக்­க­வேண்டும் என்­ப­தாகும். 

மேலும் தற்­போது புதிய அர­சி­ய­ல­மை ப்பை உரு­வாக்கும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்ளோம். அதில்  முக்­கிய ஒரு விடயம் உள்­ள­டக்­கப்­ப­ட­வேண்­டு­மென நான் கரு­து­கிறேன்.  அதா­வது  இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக அர­சி­ய­ல­மை ப்பின் ஊடா­கவே சில ஏற்­பா­டு­களை முன்­வைக்க வேண்­டு­மென நான் வலி­யு­றுத்­து­கின்றேன்.  

அத­னூ­டா­கவே இந்த நாட்டின்  இன­வா­தத்தை தடுக்க முடியும். தெற்கில் சிங்­கங்­களும் வடக்கில் புலி­களும்  மட்­டுமே வாழ­வேண்டும் என நினைப்­பது தவ­றாகும். அனைத்துப் பிர­தே­சங்­க­ளிலும்  மக்கள்  வாழ­வேண்டும் என்­பதை மனதில் கொள்­ளுங்கள்.  நாங்கள் அந்த  மக்­க­ளுக்­கா­கவே குரல்­கொ­டுக்­கின்றோம். 

கேள்வி: நீங்கள்  விக்­னேஸ்­வரன் பத­வி­வி­லக வேண்டும் என கூறு­கின்­றீர்கள்.  ஆனால்   அவரை ஆத­ரித்து இன்று (நேற்று)  ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் போராட்டம் நடத்­தி­யுள்­ள­னரே இது எதனை வெளிக்­காட்­டு­கி­றது?

பதில்: இதற்கு  நான் ஒரு சிறந்த பதிலை கூற­மு­டியும்.  கடந்த மூன்று வரு­ட­கா­லத் தில் மக்­க­ளுக்­காக எத­னையும் செய்­யாத விக்­னேஸ்­வ­ர­னுக்­காக மக்கள் வெள்ளம் நிறை­கி­றது என்றால் அவர் அந்­த­ள­விற்கு இன­வா­தத்தைப் பரப்­பி­யுள்ளார் என்­பது தெளி­வா­கின்­றது.  அதனை நீங்கள் தெற்­கிலும் காணலாம்.  

தெற்கில் முன்னாள் ஜனா­தி­பதி இன­வா­தத்தை முன்­னெ­டுப்­ப­தால்தான் அவ­ரு­டைய கூட்­டங்­க­ளுக்கு இலட்­சக்­க­ணக்­கான மக்கள் வரு­கின்­றனர்.  இலட்­சக்­க­ணக்­கான மக்கள் வந்­து­விட்­டனர் என்­ப­தற்­காக  அந்த தலைவர்  இன­வா­த­மற்ற சிறந்த தலை­வ­ரா­கி­விட முடி­யாது. 

நான் இன்று அதி­கா­ரப்­ப­கிர்­விற்­காக குரல்­கொ­டுக்­கின்றேன். எனது நிலைப்­பாட்டை மாற்றி நாளையே நான் இன­வா­தி­யாக மாறினால் என்­னாலும்  இலட்­சக்­க­ணக்­கான மக்­களை அணி­தி­ரட்ட முடியும்.  ஆனால்  அர­சியல் என்­பது அது­வல்ல.  கொள்கை ரீதியில் இன­வா­தத்தைப் பரப்­பாது   மக்­க­ளுக்கு சேவை­யாற்­ற­வேண்டும். 

கேள்வி: வடக்கு முதல்வரின் செயற்றிறனில் எந்தக்குறையைக் கண்டீர்கள்?

பதில்:  வடமாகாண சபைக்காக  ஒதுக்கப் பட்ட நிதியையே அவர் முழுமையாக பயன் படுத்தவில்லை. அமைச்சர் சுவாமிநாதன் வடக்கில் முன்னெடுத்த  வீட்டுத்திட்டத்தி ற்கு எதிராக நின்றவர். ஒரு தமிழ்  அமைச் சருடன் பேச்சுவார்த்தை நடத்தி  வடக்கு முதலமைச்சரால் ஒரு திட்டத்தை முன்னெ டுக்க முடியவில்லையாயின்  அவர் எவ் வாறு மக்களுடன்  சேவையாற்றுவார் என் பதை எம்மால் புரிந்துகொள்ள முடியும்.  என்னைப் பொறுத்தவரையில் இனவாத த்தை தவிர வடக்கு முதல்வர்  வேறு ஒன் றையும் செய்ததாக தெரியவில்லை என்றார்.