உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கியுடன் ஒரு மணிநேரம் நல்லதொரு தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடக தளமான ட்ருத் சோசியலில் இது குறித்து எழுதியுள்ள டிரம்ப் ரஸ்யாவையும் உக்ரைனையும் அவர் அவர் கோரிக்கைகள் தேவைகளின் அடிப்படையில் இணைப்பதை நோக்கமாக கொண்டது இந்த பேச்சுவார்த்தை என தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்த முயற்சிகள் சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் விரிவான அறிக்கையொன்றை விடுத்துள்ள அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மார்க்கோ ரூபியோ உக்ரைன் மேலதிக வான்பாதுகாப்பு பொறிமுறைகளை பெறுவதற்கு உதவுவதாக டொனால்ட் டிரம்ப் உறுதியளித்தார் என குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக ஐரோப்பாவிடமிருந்து .
உக்ரைனின் மின்விநியோகம் அணுஉலைகள் குறித்து ரஸ்ய உக்ரைன் தலைவர்கள் விவாதித்தனர் என குறிப்பிட்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர், அமெரிக்காவிடம் மின்சாரம் மற்றும் பயன்பாட்டு நிபுணத்துவம் உள்ளதால் உக்ரைனின் மின்விநியோகத்தினை நிர்வகிப்பதில் அமெரிக்கா உதவக்கூடும் என டிரம்ப் ஜெலென்ஸ்கியிடம் தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.
மின்நிலையங்கள் அணுஉலைகள் அமெரிக்காவின் உரிமையானால்,அது அந்த உட்கட்டமைப்பிற்கு சிறந்த பாதுகாப்பாக அமையும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
மின்நிலையங்கள் குறித்து பேசப்பட்டது ஆனால் ஜபோரிஜியாவில் உள்ள அணுஉலை குறித்தே பேசப்பட்டது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபதியுடனான இந்த உரையாடல் பெரும் நிம்மதியாக அமையும்.
டிரம்புடன் ,உரையாடல் நேர்மறையானது,வெளிப்படையானது, குறிப்பிடத்தக்கது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM