செலான் வங்கி ஊழியர்கள் சமீபத்தில் அபேக்ஷா மருத்துவமனையின் சிறுவர் பிரிவுக்கு தமது அரை நாள் சம்பளத்தை பங்களித்ததன் மூலம் ரூபாய்7.7 மில்லியனை சேகரித்து நன்கொடையாக வழங்கினர். மருத்துவமனைக்கான வளங்கள் கிடைப்பதை வலுப்படுத்தும் நோக்கில், நன்கொடையாக வழங்கப்பட்ட நிதி, லுகேமியாவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மீட்சிக்கு உதவுவதில் 80% வெற்றி விகிதத்தைக் கொண்ட இரண்டு மிகவும் பயனுள்ள மருந்துகளான IV Asparaginase 3750 IU (Hamsyl) மற்றும் IV Terumo உட்செலுத்துதல் தொகுப்புகள் 200ஐ கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்தப்பட்டது.
இந்த மருந்துகள் நோயைக் குணப்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க அளவு அதிக வாய்ப்பைக் கொண்டிருப்பதாகப் பெயர் பெற்றுள்ளன. இதன் விளைவாக மற்ற சிகிச்சை முறைகளுடன் ஒப்பிடும்போது இம் மருந்துகள் அதிக சக்தி வாய்ந்தனவாக விளங்குகின்றன. மேலும் IV Asparaginase 3750 IU (Hamsyl)இன் ஒரு குப்பியை குறித்த நேரத்தில் மூன்று சராசரி அளவிலான சிறுவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்த முடியும். இதனால் நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்படுவதை மருத்துவமனை உறுதிப்படுத்தலாம். இம் மருந்துக் கொள்வனவு ஆனது சவாலான சுகாதார நிலையத்திலிருந்து மீண்டு வரும் சிறுவர்களுக்கு மேம்பட்ட சிகிச்சை திறன்களை அளிப்பதில் மருத்துவமனையின் பிரகாசமான எதிர்காலத்தை குறிக்கிறது.
சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வில் நீடித்த மற்றும் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக செலான் வங்கியால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு பங்களிப்பு, அவர்களின் மிகப்பெரிய நன்கொடைகளில் ஒன்றாகும். இந்தப் பங்களிப்பால் வலுவூட்டப்பட்ட அபேக்ஷா மருத்துவமனை தங்கள் பராமரிப்பிலுள்ள பல நோயாளிகளுக்கு சிறந்த கவனிப்பையும் அக்கறையையும் வழங்க முடியும். இந்த நன்கொடை ஒற்றுமை மற்றும் கருணையின் சக்தி வாய்ந்த உதாரணமாகத் திகழ்கிறது. பாதிக்கப்படும் சமூகங்களை மேம்படுத்துவதற்கும் நாட்டின் சுகாதார உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் வங்கியின் அர்ப்பணிப்பை இது நிரூபிக்கிறது. மேலும் இந்த நன்கொடை, கூட்டு ஊழியர் நடவடிக்கை மூலம் மேற்கொள்ளக்கூடிய சக்தி வாய்ந்த இரக்கமிக்க செயலை பிரதிபலிக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM