பட்டலந்த வீடமைப்பு திட்டத்தை பொலிஸாரிடம் ரணில்விக்கிரமசிங்க கையளித்தவேளை அங்கு எவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறப்போகின்றன என்பது அவருக்கு தெரிந்திருந்தது ஆகவே இது தொடர்பான குற்றச்சாட்டுகளில்இருந்து அவர் தப்ப முடியாது என காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்
செய்தியாளர் மாநாட்டில் இதனை அவர் தெரிவித்துள்ளார்
25 வருடகாலத்தின் பின்னர் பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை மக்கள்மத்தியில்பேசுபொருளாகியுள்ளமை சிறந்த சமிக்ஞை என தெரிவித்துள்ள அவர் அல்ஜசீரா பேட்டியின் போது முன்னாள் ஜனாதிபதி அவ்வாறான அறிக்கையொன்று இருப்பதை மறுத்தவேளை அந்த அறிக்கையின் பிரதியை ஜனாதிபதிக்கு காண்பித்த பிபிசியின் செய்தியாளர் பிரான்சிஸ் ஹரிசனிற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து விவாதிப்பதற்கான சூழலை ஏற்படுத்தி தந்தமைக்காக அரசாங்கத்திற்கு தனது நன்றியை தெரிவித்துள்ள பிரிட்டோ பெர்ணாண்டோ பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறான சித்திரவதைகளை துஸ்பிரயோகங்களை அனுபவிக்கவேண்டியிருந்தது என்பதை பட்டலந்த அறிக்கை தெரிவிப்பதுடன் அனைத்து வகையான சித்திரவதைகளையும் அது கண்டித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
'முன்கூட்டிய அனுமதியின்றி பட்டலந்த வீடமைப்பு திட்டத்தை அந்த நபர்களிடம் கையளித்தமை மாத்திரமே தனக்கு எதிரான குற்றச்சாட்டு என ரணில்விக்கிரமசிங்க தெரிவிக்கின்றார்,அந்த பகுதியில் பல அரசாங்க அலுவலகங்கள் காணப்பட்டன,தனது அயலின் பாதுகாப்பு குறித்து கருத்தில் கொண்டே தான் பட்டலந்த வீடமைப்பு திட்டத்தை பொலிஸாரிடம் கையளிக்க தீர்மானித்ததாக அவர் தெரிவிக்கின்றார்,ஆனால் அவர் அவற்றை பொலிஸாரிடமும், தனிநபர்களிடம் கையளித்தவேளை அதற்குள் என்ன நடக்கப்போகின்றது என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தார் "என பிரிட்டோ பெர்ணாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
'இதன் காரணமாக அவர் தப்ப முடியாது ,அந்த காலப்பகுதியில் பணியாற்றிய அரசியல்வாதிகள் பொலிஸாரின் சிவில் உரிமைகளை பறிப்பதற்காக உயர்நீதிமன்றத்திற்கு மேலதிக அதிகாரங்களை வழங்கவேண்டும் என ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது( ரணில்விக்கிரமசிங்கவின் பெயரை குறிப்பிடாமல்)ஆனால் சந்திரிகா குமாரதுங்க இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவில்லை,ஆகவே பட்டலந்த முகாமில் இடம்பெற்ற விடயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அனுபவங்களை பகிரங்கமாக தெரிவிப்பதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தவேண்டும் என பிரிட்டோ பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் உரை குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டோ பெர்ணாண்டோ பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்குவதற்காக புதிய அரசாங்கம் உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்த முயல்கின்றது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு வெளிநாட்டு விசாரணை அவசியமில்லை , அரசாங்கம் உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்துவதற்கு உண்மையாகவே விரும்புகின்றது என்றால்,காணாமல் போனோர் அலுவலகத்தில் உள்ள 257 வெற்றிடங்களை அது நிரப்ப வேண்டும்,ஆகவே அரசாங்கம் இந்த வெற்றிடங்களை நிரப்பவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்,காணாமல்போனார் குறித்த அலுவலகம் விசாரணைகள் தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது ஆனால் இன்றுவரை அது குறித்து ஆராயப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM