யாழில் காணாமல்போன மீனவர்கள் இராமநாமபுரம் கடலில் மீட்பு ; தமிழக பொலிஸார் விசாரணை

Published By: Digital Desk 2

20 Mar, 2025 | 11:35 AM
image

யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற வேளை காணாமல் போன மீனவர்கள் ஐந்து நாட்களின் பின்னர் தமிழக கடலோர பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் தொண்டி மீன்பிடித்துறைமுகத்திற்கு சற்று தொலைவில் படகொன்று தத்தளித்துக்கொண்டிருந்ததை கண்ணுற்ற தமிழக கடலோர பொலிஸ் படையினர் அவர்களை படகுடன் மீட்டு கரை சேர்த்துள்ளனர்.

பின்னர், அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த இருவரும் குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், கடந்த 15 ஆம் திகதி கடற்தொழிலுக்கு சென்ற சமயம் படகு இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்து வந்ததாக கூறியுள்ளனர். 

இருவரையும் கைது செய்துள்ள தமிழக பொலிஸார், இவர்கள் கடத்தல் நோக்கத்துடன் தமிழக கடற்பரப்பினுள் நுழைந்தார்களா எனும் சந்தேகத்துடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரலாற்றிலேயே அதிக மனுக்களால் சவாலுக்கு உள்ளாகும்...

2026-08-20 05:29:55
news-image

2028 இல் இலங்கை மீண்டும் வங்குரோத்து...

2026-08-20 05:27:24
news-image

கல்முனை ஆதார வைத்தியசாலை அதிகாரிகளின் இடமாற்றத்திற்கு...

2026-08-20 05:19:49
news-image

சுகாதார சேவையாளர்களின் சீருடை விவகாரத்தை இனவாதமாக்கும்...

2026-08-20 05:15:25
news-image

கல்முனை வடக்கு வைத்தியசாலை பணிப்பாளர் மீது...

2026-08-20 05:12:45
news-image

நீதிமன்ற சுயாதீன விவகாரத்தில் சர்வதேச கோரிக்கைக்கு...

2026-08-20 04:33:10
news-image

மாத்தறை காணி முறைகேடு விவகாரம்: பஷில்...

2026-08-20 04:20:55
news-image

சுகாதாரத்துறையினர் கலாசாரத்தைப் பேணும் வகையில் ஆடை...

2026-08-20 04:17:26
news-image

புதிய கண்டுபிடிப்புகள் தேசிய வளர்ச்சிக்கு அத்தியாவசியம்...

2026-08-20 03:50:23
news-image

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம்...

2026-08-19 15:09:39
news-image

இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளுக்கான மீள்குடியேற்ற உதவிகள்...

2026-08-19 15:11:21
news-image

கல்முனை வடக்கு வைத்தியசாலையின் 09 முஸ்லிம்...

2026-08-19 16:06:41