(ஆர்.சேதுராமன்)
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (ஐ.ஓ.சி.) புதிய தலைவர் வியாழக்கிழமை (20) தெரிவு செய்யப்படவுள்ளார். கிரீஸ் நாட்டின் கொஸ்டா நவோரினோ நகரில் புதன்கிழமை (19) முதல் நடைபெறும் ஐ.ஓ.சி.யின் 144 ஆவது மாநாட்டின் ஒரு பகுதியாக புதிய தலைவருக்கான தேர்தல் வியாழக்கிழமை (20) நடைபெறவுள்ளது.
2013ஆம் ஆண்டு முதல் ஐ.ஓ.சி. தலைவராக பதவி வகித்து வரும் ஜேர்மனியரான தோமஸ் பெச், மீண்டும் அப்பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
வேட்பாளர்கள்
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் 10 ஆவது தலைவர் பதவிக்கு 7 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் எனும் உலக மெய்வல்லுநர் சம்மேளனத்தின் தலைவர் செபஸ்டியன் கோ (பிரிட்டன்), ஜோர்தான் இளவரசர் பைசல் அல் ஹுசைன், ஐ.ஓ.சி. முன்னாள் தலைவர் ஜுவான் அன்டோனியோ சமரன்ச்சின் மகனும் ஐ.ஓ.சி.யின் உபதலைவருமான ஜுவான் அன்டோனியோ சமரன்ச் சாலிசாக்ஸ், (ஸ்பெய்ன்), ஸிம்பாப்வேயின் முன்னாள் நீச்சல் வீராங்கனை கிறிஸ்டி கவென்ரி, சர்வதேச சைக்கிளோட்ட சம்மேளனத் தலைவர் டேவிட் லாபார்டியன்ட் (பிரான்ஸ்), சர்வதேச பனிச்சறுக்கல் (ஸ்கை) சம்மேளனத் தலைவர் ஜொஹான் எலியாஸ் (பிரிட்டன்), சர்வதேச ஜிம்னாஸ்டிக் சம்மேளனத் தலைவர் மோரினாரி வதானப் (ஜப்பான்) ஆகியோரே இவ்வேட்பாளர்கள் ஆவர்.
புதிய தலைவரின் பதவிக்காலம் 8 வருடங்களாகும்.
வாக்களிப்பவர்கள்
சர்வதேச ஒலிம்பிக் குழுவில் 203 தேசிய ஒலிம்பிக் சங்கங்கள் அங்கம் வகிக்கின்ற போதிலும், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்குரிமை அனைத்து நாடுகளுக்கும் கிடையாது.
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தனிப்பட்ட அங்கத்தவர்களே இத்தேர்தலில் வாக்களிக்க முடியும். இக்குழுவுக்கான அங்கத்தவர்கள் நாடுகள் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவதில்லை.
முன்னாள் மற்றும் தற்போதைய விளையாட்டு நட்சத்திரங்கள், தேசிய ஒலிம்பிக் குழுக்கள் மற்றும் விளையாட்டுச் சம்மேளனங்களின் தலைவர்கள், ஒலிம்பிக், விளையாட்டுத்துறைக்கு பங்களிப்புச் செய்த பிரமுகர்கள், அரச குடும்பத்தினர் உட்பட பலர் இக்குழுவுக்கு தெரிவு செய்யப்படுகின்றனர்.
தற்போது இக்குழுவில் 109 பேர் அங்கம் வகிக்கின்றனர். கட்டார் அமீர் ஷேக் அஹமட் பில் அல் தானி, மொனாக்கோ இளவரசர் அல்பேர்ட், பிரித்தானிய இளவரசி ஆன், இந்தியாவின் ரிலையன்ஸ் பவுண்டேசன் தலைவர் நீதா அம்பானி, ஆப்கானிஸ்தானின் முன்னாள் கூடைப்பந்தாட்ட வீராங்கனை சமீரா அஸ்காரி முதலானோரும் இவர்களில் அடங்குவர்.
இலங்கையர் எவரும் இக்குழுவில் இல்லை. பல நாடுகளின் ஒன்றுக்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் இக்குழுவில் உள்ளனர். உதாரணமாக, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்த தலா நால்வரும், இத்தாலி, சீனா, ஜப்பான், ஸ்பெய்ன், ஜேர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்த தலா மூவரும் இக்குழுவில் தற்போது அங்கம் வகிக்கின்றனர்.
இரகசிய வாக்களிப்பு முறையில் இத்தேர்தல் நடைபெறும். முதல் சுற்றில் போதிய பெரும்பான்மையை எவரும் பெறாவிட்டால், மேலதிக சுற்று வாக்களிப்புகள் நடைபெறும்.
தலைவர் பதவிக்கான தேர்தலில் ஒரு நாட்டைச் சேர்ந்தவர் போட்டியிடும்போது, அவரின் சக நாட்டவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதன்படி இம்முறை முதல் சுற்றில் 9 பேர் வாக்களிக்க முடியாது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM