சட்ட ரீதியாக பணிநீக்கம் செய்யப்படாமல் பணிக்கு சமூகமளிக்க தவறிய முப்படைகளைச் சேர்ந்த 1,600 க்கும் மேற்பட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துயகொண்டாவின் உத்தரவைத் தொடர்ந்து, சட்டரீதியாக இராஜினாமா செய்யாமல் பணியில் இருந்து தப்பிச் சென்ற முப்படையினரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
நேற்று புதன்கிழமை (19) தப்பியோடிய 1,604 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், முப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 1,444 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 160 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 1,394 பேர் இராணுவ வீரர்கள், 138 பேர் விமானப்படை வீரர்கள் மற்றும் 72 பேர் கடற்படை வீரர்கள் என பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM