அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள ஜோன்எவ் கென்னடி கொலைகுறித்த ஆவணங்கள் மூலம்; இலங்கையில் சிஐஏ தளம் இயங்கியது குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.
டிரம்பினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள ஆவணங்களில் பனிப்போர் காலத்தில் சிஐஏயின் நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் காணப்படுகின்றன அதில் இலங்கை உட்பட பல நாடுகளில் சிஐஏயின் இரகசிய தளம் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ் கென்னடி படுகொலை குறித்து கடந் சில நாட்களிற்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள ஆவணங்கள் கொல்கத்தா புதுடில்லியில் சிஐஏயின் இரகசிய தளங்கள் இயங்கியதாக தெரிவிக்கின்றன.
அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம் மற்றும் பதிவுகள்நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட இந்த ஆவணங்கள் இந்தியாவிலும் உலகெங்கிலும் சிஐஏயின் நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
இந்தியாவில் புதுடில்லி கொல்கத்தாவிலும் பாக்கிஸ்தானில் ராவல்பின்டியிலும், இலங்கையில் கொழும்பிலும்,ஈரானிலும் தெஹ்ரானிலும் தென்கொரியாவில் சியோலிலும்,ஜப்பானில் டோக்கியோவிலும் இந்த தளங்கள் காணப்பட்டதாக பகிரங்கப்படுத்தப்பட்ட ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தளங்கள் உள்நாட்டு அரசாங்கங்களின் சட்ட கண்காணிப்பைகொண்டிருக்கவில்லை,இங்கு உரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமல்,விசாரணைகள்இன்றிபலர் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் என பகிரங்கப்படுத்தப்பட்ட ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM