பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வெளியிட்ட கருத்துக்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் முற்றாக மறுக்கிறது

Published By: Vishnu

20 Mar, 2025 | 02:56 AM
image

(நெவில் அன்தனி)

பாராளுமன்றத்தில் 2025 மார்ச் 18ஆம் திகதி நடைபெற்ற ஒதுக்கீட்டு மசோதா மீதான பாராளுமன்ற விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேயினால் முன்வைக்கப்பட்ட ஆதாரமற்ற மற்றும் போலி குற்றச்சாட்டுகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) திட்டவட்டமாக மறுத்து முற்றாக நிராகரிக்க விரும்புகிறது.

இந்த விவாதத்தின் போது, அப்போதைய பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் 150,000 ரூபா சம்பளம் வழங்கியதாகவும், நிர்வாகக் குழுவின் தீர்மானத்திற்கு அமைய அவருக்கு மடிக்கணினி, கையடக்க தொலைபேசி மற்றும் பிற சலுகைகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வழங்கியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விதானகே குற்றம் சாட்டினார். இந்த நடவடிக்கைகள் லஞ்சம் கொடுத்ததற்குச் சமம் என்றும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் லஞ்சம் வழங்கியதற்காக சட்ட விதிகளின் கீழ் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவரால் கூறப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை, எவ்வித உண்மை அடிப்படையும் இல்லாதவை என்பதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் திட்டவட்டமாக கூற விரும்புகிறது.

வெளிநாட்டு தேசிய அணிகள், சர்வதேச சுற்றுப் பயணங்கள், வீரர்கள், நிகழ்ச்சிகள் மற்றும் அரச தலைவர்கள் உட்பட வருகை தரும் பிரமுகர்களுக்கு மிக உயரிய பாதுகாப்பை உறுதி செய்வதே ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முதன்மையான பொறுப்பாகும் என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, சம்பந்தப்பட்ட அனைவருக்கும ஆபத்தற்ற மற்றும் பாதுகாப்பை பேணுவதற்கு உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உட்பட இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் SLC தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகிறது.

இது சம்பந்தமாக, சர்வதேச கிரிக்கெட் சுற்றுப்பயணங்களின்போது விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக பதவியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவது ஒரு பொதுவான மற்றும் அவசியமான நடைமுறையாகும்.

மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக தேசபந்து தென்னகோன் பணியாற்றிய காலப்பகுதியில் சர்வதேச சுற்றுப்பயணங்கள் தொடர்பான பாதுகாப்பு விஷயங்களில் SLC அவரது நிபுணத்துவத்தை நாடியது. நாடு கோவிட் தொற்று நோயிலிருந்து விடுபட்டு 'புதிய இயல்பு' நிலையை அனுபவித்து வந்த வேளையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுகாதார அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படும் 'கோவிட் நெறிமுறைகளை' செயல்படுத்த SLC கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. இந்த நடவடிக்கைகளால்தான் அக் காலப்பகுதியில் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை தங்கு தடையின்றி நடத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு இயலுமாக இருந்தது.

எங்கள் கோரிக்கையைத் தொடர்ந்து, தொழில்முறை மற்றும் அதிகாரப்பூர்வ நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக,  தென்னக்கோன் தனது சேவையில் உள்ள பதவி நிலை காரணமாக உயர் அதிகாரிகளிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்று SLCயிடம் தெரிவித்தார். பின்னர், ஒரு சேவையில் உள்ள பொலிஸ் அதிகாரியாக, தனது அதிகாரப்பூர்வ கடமைகளுக்கு வெளியே எந்த விசேட பணிகளிலும் ஈடுபடுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என SLCக்கு தென்னக்கோன் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, தேசிய முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தேவையான பாதுகாப்பு உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார்.

தேசபந்து தென்னக்கோனுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பணம் எதுவும் செலுத்தவில்லை என்பதையும் மடிக்கணினி, கையடக்க தொலைபேசி அல்லது பிற சலுகைகளை வழங்கவில்லை என்பதையும் உறுதியாக கூறிக்கொள்கிறோம். மேலும் அவர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் ஆலோசகராகவோ அல்லது வேறு எந்தப் பொறுப்பிலோ ஈடுபடவில்லை என்பதை நாங்கள் திட்டவட்டமாகக் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

பாராளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வெளியிட்ட ஆதாரமற்ற மற்றும் தவறான அறிக்கைகளை ஸ்ரீல்ஙகா கிரிக்கெட் வன்மையாகக் கண்டிக்கிறது, மேலும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் நற்பெயர் மற்றும் நேர்மைக்கு அநாவசியமாக தீங்கு விளைவிப்பதை தவிர்க்கும் வகையில் பொது அறிக்கைகளை விடுக்கும் போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் SLC வலியுறுத்துகிறது.

SLC வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடைசியில் பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் டெல்ஹியை...

2025-04-30 01:36:34
news-image

ப்ரதிக்கா சாதனை நிலைநாட்டிய மகளிர் மும்முனை...

2025-04-29 19:12:49
news-image

கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ், ஜெவ்னா கிங்ஸின் தொழில்முறை...

2025-04-29 17:16:24
news-image

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு...

2025-04-29 11:27:01
news-image

சர்வதேச பந்துவீச்சாளர்களை சிதறடித்து ரி20இல் மிக...

2025-04-29 01:47:32
news-image

14 வயது சிறுவன் ஐபிஎலில் குறைந்த...

2025-04-29 00:48:06
news-image

இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: இரண்டாவது...

2025-04-28 20:55:30
news-image

பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் டெல்ஹியை வீழ்த்தியது...

2025-04-28 01:51:26
news-image

லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வெளுத்துக்கட்டியது மும்பை...

2025-04-27 20:55:35
news-image

மகளிர் மும்முனை சர்வதேச ஒருநாள் தொடர்...

2025-04-27 18:43:08
news-image

முதலாவது இளையோர் ஒருநாள் போட்டியில் ஆகாஷ்...

2025-04-26 21:51:08
news-image

கடைநிலை அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னையை...

2025-04-26 01:12:59