டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்­டிகள் கொண்ட தொடரில் விளை­யா­டு­வ­தற்கு இலங்­கைக்கு இம்­மாத இறு­தியில் சிம்­பாப்வே அணி சுற்றுப் பயணம் ஒன்றை மேற்­கொள்­ள­வுள்­ளது.

அதன்­படி இங்கு வரும் சிம்­பாப்வே அணி இலங்­கை­யுடன் மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொட­ரிலும், ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொட­ரிலும் மோத­வுள்­ளது.

இந்தப் போட்­டிகள் அனைத்தும் காலி மற்றும் பல்­லே­கல ஆகிய மைதா­னங்­க­ளி­லேயே நடை­பெ­ற­வுள்­ளன.

சம்­பியன்ஸ் கிண்ணத் தொடரில் அரை­யி­று­திக்கு முன்­னேறும் வாய்ப்பை தவ­ற­விட்ட இலங்கை அணி தற்­போது நாடு திரும்பி தங்­களின் வழக்­க­மான பயிற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

இந்­நி­லையில் சிம்­பாப்வே அணி­யு­ட­னான தொடரில் இலங்கை அணி தங்­களை மெரு­கேற்றிக் கொள்ள முடியும் என்று எதிர்­பார்க்­கின்­றது.

சிம்பாப்வே தொடர் முடிவடைந்ததும் எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் இந்திய அணி இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.