இவர் ஒரு குற்றவாளி – ஆனால் இவர் அகம்பாவத்துடன் நீதிமன்றத்திற்குள் நுழைந்தார், இவர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட பாதளஉலகத்தினர் போன்றவர் – நீதிமன்றத்தில் தேசபந்து தென்னக்கோனிற்கு எதிராக கடும் சீற்றத்தை வெளிப்படுத்தினார் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்

Published By: Rajeeban

19 Mar, 2025 | 10:05 PM
image

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிற்கு பிணை வழங்குவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த சட்டமாஅதிபர் திணைக்களம் அவரை கைதுசெய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் தென்னக்கோன் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளிடமிருந்து மறைந்திருந்தார் என தெரிவித்துள்ளது.

பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்,மாத்தறை நீதிமன்றத்திற்கு கோர்ட்சூட் அணிந்து ஆடம்பர பென்ஸ் காரில் வந்தார் என எனக்கு தகவல் கிடைத்தது,அவர் நீதிமன்ற வளாகத்திற்குள் அமர்ந்திருந்தார்,இந்த தகவல் கிடைத்த பின்னரே நான் நீதிமன்றத்தில் ஆஜராக தீர்மானித்தேன்,சந்தேகநபர் தான் ஒரு இரகசிய பூனை போல நீதிமன்றத்திற்குள் நுழைந்து,எங்களிற்கு தெரியப்படுத்தாமல் பிணையை பெறலாம் என நினைத்திருந்தார் என சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ் தெரிவித்தார்.

நான் நீதிமன்றத்திற்கு வந்தவேளை அவர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார், கனம் கோர்ட்டார் அவர்களே எப்படி அவருக்கு ஆசனம் வழங்கப்பட்டது அவர் சிறைக்கூண்டில் அடைக்கப்பட்டிருக்கவேண்டும் என திலீபா பீரிஸ் தெரிவித்தார்.

இவர் ஒரு குற்றவாளி ஒரு குற்றவாளி அகம்பாவத்துடன் நீதிமன்றத்திற்குள் நுழைய கூடாது,அவர் நிலத்தில் தவழ வேண்டும்,இவர் 20 நாட்கள் தனது தொலைபேசியை செயல் இழக்கச்செய்துவிட்டு,20 நாட்கள் தலைமறைவாகியிருந்தார்,இவருக்கும் மார்கந்துரே மதுஸ் போன்ற திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களிற்கும் வித்தியாசமில்லை என அவர் தெரிவித்தார்.

.இந்த சந்தேகநபர் பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த காலத்தில் சட்டத்தரணிகள் குற்றவாளிகளை பாதுகாக்கின்றனர் என தெரிவித்தவர்,ஆனால் இன்று அவரே சட்டத்தரணிகள் புடைசூழ நீதிமன்றம் வந்துள்ளார்,இது டபில்யூ 15 ஹோட்டல் தொடர்புபட்ட விடயம் மாத்திரமல்ல,இது கர்மாவின் நீதி.

இவருக்கு கர்மா குறித்து விளங்கப்படுத்த தேவையில்லை அவரே அதனை அனுபவிக்கின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சில பகுதிகளில் ஆரோக்கியமான நிலையில் காற்றின்...

2025-04-21 10:53:18
news-image

மைத்திரிபால சிறிசேன சி.ஐ.டி.யில் ஆஜர் !

2025-04-21 10:52:39
news-image

ஹட்டனில் லொறி விபத்து - மூவர்...

2025-04-21 10:27:27
news-image

மதுபான களியாட்டத்தில் தகராறு ; கூரிய...

2025-04-21 10:22:17
news-image

தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது...

2025-04-21 10:27:18
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167...

2025-04-21 09:57:23
news-image

பொலன்னறுவையில் கார் - மோட்டார் சைக்கிள்...

2025-04-21 09:39:54
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்...

2025-04-21 09:02:07
news-image

இன்றைய வானிலை

2025-04-21 06:17:24
news-image

சாவகச்சேரியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர்...

2025-04-21 02:33:37
news-image

யாழில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் நால்வர்...

2025-04-21 02:14:25
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது...

2025-04-20 21:29:43