(நெவில் அன்தனி)
சீனாவின் நஞ்சிங் நகரில் வெள்ளிக்கிழமை (21) ஆரம்பமாகவுள்ள உலக உள்ளக (மெய்வல்லுநர்) சம்பியன்ஷிப்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டிகளில் அமெரிக்கா, ஜெமெய்க்கா, இந்தியா. சீனா ஆகிய பிரபல நாடுகளின் அணிகளுடன் இலங்கையின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளும் போட்டியிடவுள்ளன.
இது இலங்கை மெய்வல்லுநர்களுக்கு மிகச் சிறந்த அனுவத்தைப் பெற்றுக்கொடுக்கும் என நம்பப்படுகிறது.
உலக உள்ளக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் நாளை முதல் 3 தினங்களுக்கு நடைபெறவுள்ளது.
உலக உள்ளக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தொடர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு சில முக்கிய நாடுகள் முன்வராததால் அப் போட்டிகளில் பங்குபற்றுமாறு ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் நிறுவனத்திற்கு (இலங்கை மெய்வல்லநர் சங்கம்) வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (உலக மெய்வல்லுநர் நிறுவனம்) அழைப்பு விடுத்திருந்தது.
இந்த அழைப்பை ஏற்று தொடர் ஓட்ட அணிகளை சீனாவின் நஞ்சிங்குக்கு அனுப்பிவைக்க தீர்மானித்ததாக ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) பாலித்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதனை அடுத்து உலக உள்ளக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் வரலாற்றில் 12 மெய்வல்லுநர்களைக் கொண்ட மிகப் பெரிய அணியை சீனாவுக்கு ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் நிறுவனம் அனுப்பவுள்ளது.
உலக உள்ளக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் வீரர்கள் மூவரை மாத்திரம் அனுப்புவதற்கு ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் (இலங்கை மெய்வல்லுநர் நிறுவனம்) ஏற்கனவே முடிவு செய்து அவர்களது பெயர் விபரங்களையும் வெளியிட்டிருந்தது.
பங்குபற்றும் இலங்கை வீரர்கள்
நதுன் கவீஷ பண்டார (ஆண்களுக்கான 60 மீற்றர் சட்ட வேலி ஓட்டப் போட்டி), சமோத் யோதசிங்க (ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டி) காலிங்க குமாரகே (ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டி) ஆகிய மூவரே உலக உள்ளக மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றவிருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது தொடர் ஓட்டப் போட்டிகளிலும் பங்குபற்ற இலங்கைக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால் மொத்தமாக 12 மெய்வல்லுநர்களை சீனாவுக்கு அனுப்பிவைக்க ஸ்ரீலங்கா அத்லெட்க்ஸ் தீர்மானித்தள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.
தொடர் ஓட்டப் போட்டிகளில் ஐக்கிய அமெரிக்கா, ஜெமெய்க்கா, ஹங்கேரி, நைஜீரியா, இந்தியா, வரவேற்பு நாடான சீனா ஆகியவற்றுடன் இறுதிப் போட்டியில் இலங்கை பங்குபற்றவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
குறுந்தூர ஓட்ட வீரர் காலிங்க குமாரகே தலைமையிலான இலங்கை அணியினர், நஞ்சிங் உலக உள்ளக மெய்வல்லநர் சம்பியன்ஷிப்பில் ஐந்து ஓட்ட நிகழ்ச்சிகளில் பங்குபற்றவுள்ளனர்.
எவ்வாறாயினும் ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் அருண தர்ஷன பங்குபற்றமாட்டார் என அறிய கிடைக்கிறது. அவர் தற்போது அவுஸ்திரேலியாவில் பயிற்சிகளில் ஈடுபட்டுவருவதடன் அங்கு நடைபெறவுள்ள மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றிய பின்னரே நாடு திரும்பவுள்ளார். இதனை ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸுக்கு அருண தர்ஷன அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் காலிங்க குமாரகேவுடன் இளம் வீரர்களான ரந்திம மதுஷான், சதேவ் ராஜகருண, ஒமெல் ஷஷின்த சில்வா, இசுறு லக்ஷான் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.
இவர்கள் நால்வரும் அண்மையில் நடத்தப்பட்ட திறன்காண் போட்டிகளில் சிறந்த நேரப் பெறுதிகளைப் பதிவுசெய்திருந்தனர்.
பெண்களுக்கான 4 x 400 மீற்றர் ஓட்டப் போட்டிக்கான இலங்கை குழாத்தில் நடீஷா ராமநாயக்கவுடன் இளம் வீராங்கனைகளான லக்ஷிமா சயுரி மெண்டிஸ், நிஷேந்த்ரா பெர்னாண்டோ, ஜயேஷி உத்தாரா, ஜித்மா விஜேதுங்க ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
பெண்களுக்கான 4 x 400 மிற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, போலந்து, இந்தியா, சீனா ஆகியவற்றுடன் இலங்கை போட்டியிடும்.
இலங்கை அணியினர் இன்று இரவு இங்கிருந்து சீனாவின் நஞ்சிய் நோக்கி பயணமாகவுள்ளனர்.
நஞ்சிங் உலக உள்ளக மெய்வல்லநர் சம்பியன்ஷிப்பில் 127 நாடுகளைச் சேர்ந்த 312 வீரர்களும் 264 வீராங்கனைகளுமாக மொத்தம் 576 மெய்வல்லுநர்கள் பங்குபற்றவுள்ளதாக வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் முன்னர் அறிவித்திருந்தது.
இப்போது இலங்கையிலிருந்து மேலும் 9 வீர, வீராங்கனைகள் மேலதிகமாக சீனா செல்வதால், உலக உள்ளக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் பங்குபற்றும் மெய்வல்லுநர்களின் எண்ணிக்கை 585 ஆக உயர்ந்துள்ளது.
அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலமாக: சயுரி மெண்டிஸ், நடீஷா ராமநாயக்க, சமன் குமார குணவர்தன (ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ்பொதுச் செயலாளர்), சஞ்சீவ வீரக்கொடி (பயிற்றுநர்? முகாமையாளர்), காலிங்க குமாரகே (அணித் தலைவர்), சமோதம் யோதசிங்க, நிற்பவர்கள்: ஜித்மா விஜேதுங்க, ஜயேஷி உத்தாரா, சதேவ் ராஜகருண, நாதுன் கவீஷ பண்டார, ஓமெல் ஷ ஷிந்த சில்வா, ரந்திம மதுஷான், இசுறு லக்ஷான், நிஷேந்த்ரா பெர்னாண்டோ.
காலிங்க குமாரகே (அணித் தலைவர்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM