தெற்கு  அரசின் சதித்­திட்டம் ஒன்­றுக்கு அமைவா­கவே வடக்கு மாகாண சபையில் குழப்­பங்கள் தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளன. அதன்  ஒரு அங்­க­மா­கவே என் மீது நம்­பிக்­கை­யில் லாப் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது என்று வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைக் கண்­டித்தும்  முத­ல­மைச்­ச­ருக்­கான தங்கள் பேரா­த­ரவை வெளிப்­ப­டுத்­து­மு­க­மா­கவும் தமிழ் மக்கள் பேர­வை­யினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட கவ­ன­யீர்ப்புப் பேரணி  நேற்றுக்காலை இடம்­பெற்­றது. இந்தப் பேர­ணியில் கலந்­து­கொண்டு நல்லூரில் அமைந்துள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத் தில் கூடிய பெருமளவான மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் உரை­யாற்­று­கையில்,

இங்கு திரண்­டி­ருக்­கின்ற சனக்­கூட்­டத்தைப் பார்க்கும் போதுஇ இதுவரை காலமும் நாங்கள் செய்­த­தற்கு ஒரு அர்த்தம் இருக்­கின்­றது என்­பதை உணரக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. இந்தச் சேவையைத் தொடர்ந்தும் செய்து கொண்­டே­வ­ருவேன்.எங்­க­ளு­டைய கட­மை­களைச் செய்து கொண்டு வரும் போது பல­ருக்கு பல பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­கின்­றன.

அதனால் தான் பழைய தள­பதி சரத் பொன்­சேகா இங்கு வந்து சென்ற போது "விரைவில் விக்­கினேஸ்­வரன் தன்­னு­டைய பத­வியைப் பறி­கொ­டுத்து விடுவார்" என்று கூறி­யி­ருந்தார். அவர் அவ்­வாறு கூறும் போது நான் நினைத்தேன் எனக்கும் அவ­ருக்கும் எந்­த­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லைஇ அவர் ஏன் இவ்­வாறு கூறு­கின்றார் என்று. இந்த வேளையில் தான் இதன் பின்­ன­ணியில் எனக்கு எதி­ராக சதித்­திட்டம் ஒன்று தீட்­டப்­பட்­டி­ருப்­பதை உணர முடிந்­தது.

அதில் ஈடு­பட்­ட­வர்­களைப் பற்றி எனக்குக் கவ­லை­யில்லை. அமைச்­சர்­க­ளுக்­கெ­தி­ரான குற்­றச்­சாட்­டுகள் குறித்து அறிக்­கைகள் வெளி­வ­ர­வி­ருக்­கின்­றன. அது தொடர்பில் முத­ல­மைச்சர் இரண்டு வழி­களில் முடி­வெ­டுத்­தாக வேண்டும். அமைச்­சர்­களைக் காப்­பாற்­று­வ­தற்­காக நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும். இல்­லை­யென்றால் அவர்கள் தண்­டிக்­கப்­பட வேண்டும். அதில் எது நடந்­தாலும் அதைத் தமக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்­வது என்று அவர்கள் நினைத்­தி­ருந்­தார்கள்.

அதா­வது அவர்­களைக் காப்­பாற்­றினால் குற்றம் செய்­த­வர்­களை இவர் காப்­பாற்றி விட்டார் என்று அதை ஒரு கார­ண­மாகக் காட்டி முன்­னோக்­கி­யி­ருப்­பார்கள். இப்­போது அவர்­களைத் தண்­டிக்கப் போய்இ அவர்­களைத் தண்­டித்­தது ஒரு பிழை என்ற முறை­யில் இப்­பொ­ழுது ஒரு நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மா­னத்தைக் கொண்டு வந்­தி­ருக்­கி­றார்கள்.

ஆகவே என்னை வெளி­யேற்­றி­விட வேண்டும் என்ற எண்­ணத்­தில் தான் அவர்­க­ளு­டைய நட­வ­டிக்­கைகள் அமைந்­தி­ருந்­தன. அவர்­க­ளு­டைய எண்­ணத்­துக்­கான பதிலை நீங்கள் கூறி­விட்­டீர்கள்.

மக்­க­ளு­டைய பிரச்­சி­னைகள் பல இருக்­கின்­றன. அவற்றை நாங்கள் தீர்க்க முனை­கின்ற போது தேவை­யில்­லாத விட­யங்­களைப் பேசிப் பேசிக் காலத்தை வீண­டித்து விட்டோம். அந்த அடிப்­ப­டை­யி­லேயே தான் என் மீதான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைக் கொண்டு வந்­தி­ருக்­கி­றார்கள். அது என்ன நடக்­கி­றது - எவ்­வாறு போகப் போகி­றது என்­பதைப் பற்றி எனக்குக் கவ­லை­யில்லை.

ஒன்றை மட்டும் நான் உங்­க­ளுக்குக் கூறுவேன். நாங்கள் தொடர்ந்தும் எங்­க­ளு­டைய கட­மை­களைக் கட்­டாயம் செய்வோம். கட­மையைச் செய்யும் ஒரு­வ­னுக்குத் தோல்­வியும் இல்லை: வெற்­றியும் இல்லை. அந்த நிலையில் இருந்து நாங்கள் எங்­க­ளு­டைய கட­மை­களைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்­பு­கிறோம்.

ஒரு சில விட­யங்­களை நான் இந்த இடத்­தில் குறிப்­பிட விரும்­பு­கிறேன். இவ்­வா­றான விசா­ர­ணைகள் இடம்­பெற வேண்டும் என்ற கோரிக்­கை­களை விடுத்­ததும் எங்­க­ளு­டைய உறுப்­பி­னர்கள் தான். தவ­றுகள் நடை­பெ­று­வ­தாக எனக்கு சொல்­லி­யி­ருந்தால் கட்­டாயம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருப்பேன்.

அதை­விட்டுத் தங்கள் பெயர் பத்­தி­ரி­கை­களில் வர­வேண்டும் என்­ப­தற்­காக இயங்­கி­ய­தனால் தான் நாங்கள் இந்த விசா­ர­ணைக்­கு­ழுவை அமைத்தோம். விசா­ர­ணைக்­குழு இரண்டு பேரைக் குற்­ற­வா­ளிகள் என்று தீர்த்­தது. மற்­றைய இரண்டு பெயர் மீதான குற்­றச்­சாட்­டுக்­களையும் நிரூ­பிக்க முடி­யாமல் போய் விட்­டது. 

அவர்கள் மீதான முறைப்­பாட்­டா­ளர்கள் விசா­ர­ணை­க­ளுக்கு வர­வில்லை. அதனால் அவர்கள் விடு­விக்­கப்­பட்­டதால்இ அவர்கள் குற்­ற­வா­ளிகள் இல்லை என்று அர்த்தம் இல்லை. அதை­விட அவர்கள் சம்­பந்­த­மாக வேறு வேறு குற்­றங்­களும் அவர்கள் மீது இப்­போது கிடைத்­தி­ருக்­கின்றன. இது சம்­பந்­த­மாக மேலும் ஒரு விசா­ரணை நடை­பெறும்.

இது வட மாகா­ணத்தின் முத­லா­வது மாகாண சபை. இந்த சபை­யில் ஊழல் சம்­பந்­த­மாக நாங்கள் நட­வ­டிக்கை எடுக்­காமல் விட்டால் தொடர்ந்தும் இதைத்தான் நாங்கள் சந்திக்க வேண்டிவரும்.இதற்குரிய நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துக் கொண்டு வருகிறோம்.

இவ்வாறான சனக்கூட்டம் எங்களுக்குச் சார்பாக நடக்கும் போதுஇ எங்களுடைய பாதை சரியென்று எனக்குப் படுகிறது. உங்களுடைய நலன் சார்ந்த சகல நடவடிக்கைகளையும் நான் எடுப்பேன் என்று உங்களுக்கு உறுதிமொழி அளிக்கின்றேன் என்றார்.