(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கே எமது கட்சியின் தவிசாளர் பதவி விலகினார். மாறாக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா போன்று பதவியை தொடர்ந்து அணைத்துக்கொண்டிருப்பதில்லை. புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகியுள்ளார். எமது கட்சியில் இருக்கும் இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கவே பதவி விலகியுள்ளார். அதுதான் எமது கட்சியில் இருக்கும் சிரேஷ்ட உறுப்பினர்களின் முன்மாதிரி நடவடிக்கை.
ஆனால், மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா போன்று எமது கட்சியில் யாரும் தொடர்ந்து அந்த பதவிகளை அனைத்துக்கொண்டிருப்பதில்லை.
அத்துடன் இடம்பெற இருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 300 உள்ளூராட்சி மன்றங்களில் 100 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றுவதுடன் அதன் தலைவர்களாகவும் நியமிக்கப்படுவார்கள் என்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
கிராம மக்கள் கிராமத்தில் வேலை செய்ய முடியுமான, கிராம மக்களின் கவலை, கஷ்டம் தொடர்பில் தெரிந்த வேட்பாளர்களையே தெரிவு செய்வார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM