போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜோசப் ஸ்டாலின் முல்லைத்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு பழிவாங்கப்பட்டார் - ரோஹித்த

19 Mar, 2025 | 05:16 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

எமது அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலினுக்கு  நீதிமன்றம் பிணை வழங்கியது. இருப்பினும்  பழிவாங்குவதற்காக அரசாங்கம் அவரை முல்லைத்தீவுக்கு கொண்டு சென்று தனிமைப்படுத்தியது. இறுதியில் எமது அரசாங்கம் இல்லாமல் போனது. தொழில் வாய்ப்புக்களை கோரி வேலையில்லா பட்டதாரிகள்    தற்போது  போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு எதிராக செயற்படுவதை  அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத் திட்டத்தின்   வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும்  கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு   மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அங்கு   அவர் மேலும் உரையாற்றியதாவது,

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தன்று பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு கடினமானது. ஆகவே அவதானத்துடன் செயற்படுங்கள்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும் போது' பால்மா பிள்ளைகளுக்கு மிகவும் முக்கியமானது. பால்மா விலையை குறைக்க வேண்டும்.அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விதிக்க கூடாது, அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

நிதியமைச்சின் அதிகாரிகள் எவரும் தேர்தல் கோருவதில்லை.  மக்கள் மத்தியில்  அவர்கள் செல்வதில்லை. ஆகவே ஜனாதிபதியை பாதுகாத்துக்கொள்ளுங்கள். 400 கிராம் பால்மாவின்  விலை 1,100 ரூபா, 1 கிலோகிராம் 2,750 ரூபா ஆகவே இறக்குமதி வரியை குறைத்து பால்மாவின் விலையை குறையுங்கள். மக்களுக்கு நிவாரணம் வழங்குங்கள்.

மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வாழ்க்கைச் செலவுகள் உயர்வடைந்துள்ளன. எமது அரசாங்கத்தின்  வாழ்க்கைச் செலவுகள் குறைவுகள் என்று நாங்கள் குறிப்பிடவில்லை. வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பால் தான் வீதிக்கு இறங்கி போராடினார்கள். எமது அரசாங்கத்தை  வீழ்த்தி தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தை கொண்டு வந்துள்ளார்கள்.

யார் ஆட்சியில் இருப்பது என்று மக்கள் பார்ப்பதில்லை. தான்  சிறந்த முறையில் வாழ வேண்டும் என்றே மக்கள் கருதுவார்கள். அரிசியின் விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே மக்கள் தொடர்பில் இந்த அமைச்சு  ஊடாக   விசேட கவனம் செலுத்த வேண்டும்.

எதிர்க்கட்சியில் இருக்கும் போது வாய்க்கு வந்தபடி பேசலாம். ஆனால் அரசாங்கத்துக்கு வந்ததன் பின்னர் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தையும் நிறைவேற்ற முடியாது. 35 ஆயிரம் பட்டதாரிகள்   தற்போது  தொழில்வாய்ப்புக்களை கோரி போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். 

எமது அரசாங்கத்தில்  கொத்தலாவெல  பல்கலைக்கழகத்துக்கு எதிராக ஜோசப் ஸ்டாலின்  போராட்டத்தில் ஈடுபட்டார்.அவரை கைது செய்து நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது. இருப்பினும்  பழிவாங்கும் நோக்கத்தில் அவரை எமது அரசாங்கம் முல்லைத்தீவு பகுதிக்கு தனிமைப்படுத்தலுக்காக கொண்டு சென்றது.இதனால் எமது அரசாங்கமும் இல்லாமல் போனது.

வேலையில்லா பட்டதாரிகளில் பெரும்பாலானோர் இந்த அரசாங்கத்துக்கு  வாக்களித்தார்கள். ஆகவே தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக தொழில் வாய்ப்புக்களை வழங்குங்கள்.  பட்டதாரிகளின் போராட்டத்தை தடுப்பதற்கு   நடவடிக்கை எடுப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இளம் வயதில் திருமணம் செய்துக்கொண்ட நண்பன் பிறிதொரு நண்பனுக்கு குடும்ப வாழ்க்கையை சிறந்த முறையில் நடத்துவதற்கு ஆலோசனை வழங்குவது உண்டு.   ஆலோசனை பெற்ற நண்பன் திருமணம் முடித்ததன் பின்னர் தான் உண்மையை அறிவார்.அப்போது எவ்வாறு குடும்பத்தை நிர்வகிப்பார் என்று  அந்த நண்பர் கேள்வி கேட்பார். அது போலதான் இந்த அரசாங்கமும் உள்ளது. கடந்த காலங்களில்  வழங்கி ஆலோசனைக்கு அமைய தற்போது செயற்பட முடியாது என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51