அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குங்கள் - அரசாங்கத்திடம் முஜிபுர் கோரிக்கை

19 Mar, 2025 | 05:09 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கொழும்பு விலைச்சுட்டெண்ணின் பிரகாரம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  4 பேர்கொண்ட குடும்பத்தின் மாத செலவு  79 ஆயிரத்து 923 ரூபாவாகும்.

2025 பெப்ரவரி மாதத்தில் அது ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 409 ரூபாகும். இது மக்களால் தாங்கிக்கொள்ளக்கூடிய தொகை அல்ல. அதனால் அரசாங்கம் தேர்தல் மேடைகளில் மக்களுக்கு அளித்த வாக்குறுதியின் பிரகாரம் அத்தியாவசிய பொருட்களின் வரிகளை குறைத்து, மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை  (19) இடம் பெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின்  வர்த்தக, வாணிப்ப, உணவுப்பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி  அமைச்சு  ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்

 அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,  

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரசாரங்களின்போது அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கு 18 சதவீத வரியை உடனடியாக நீக்குவதாக தெரிவித்திருந்தாா். அதேபோன்று பாடசாலை உபரகணங்களுக்கான வரி, எரிபொருளுக்கான 50 ரூபா வரி ஆகியவற்றையும் நீக்குவதாக தெரிவித்திருந்தார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலேயே இந்த வரிகளை நீக்குவதாக தெரிவித்தார். ஆனால் இதுவரை அந்த வரிகள் எதனையும் நீக்கவில்லை. அவை வெறும் தேர்தல் வாக்குறுதியாக மாத்திரமே இருந்து வருகிறது.

அதேபோன்று நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோது, அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்திருந்தது. கடந்த காலங்களிலும் அரிசி இறக்குமதி செய்திருக்கிறது. ஆனால் எந்த அரசாங்கமும் அரிசி இறக்குமதிக்கு 10 ரூபாவுக்கும் அதிகம் வரி அறவிட்டதில்லை என்றாலும் அரசாங்கம் இறக்குமதி செய்யும் ஒரு கிலாே அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடுகிறது. அதேநேரம் அரிசி ஆலை உரிமையாளர்கள் அவர்கள் தெரிவிக்கும் விலைக்கு அரிசி விற்பனை செய்வதற்கு பாரியளவில் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. 

அரிசி மாபியாவை இல்லாதொழிப்பதகாக தெரிவித்துவந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுடன் ஜனாதிபதி அரிசி ஆலை உரிமையாளர்களுடன் 5 தடவைகள் கலந்துரையடி அவர்களுக்கு கிலோ ஒன்றுக்கு 10ரூபா அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுத்தார்.

எதிர்க்கட்சியில் இருக்கும்போது மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் வறுமையில் இருக்கும் மக்களுக்கு வசதி வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க வேண்டுமென தெரிவித்துவந்தவர்கள், தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர் அவை அனைத்தையும் மறந்து செயற்படுகின்றனர். ஏப்ரல் முதலாம் திகதி முதல் பால்மா விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டு செல்வதன் மூலம் மக்கள் மிகவும் கஷ்டமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தேசிய நுகர்வோர் சங்கத்தின் 2019 ஆம் ஆண்டின் டிசம்பர் மாத விலைச்சுட்டெண்ணின் பிரகாரம் 4 பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு மாத செலவு 43,391 ரூபாவாகும்.

அதேநேரம் 2025 ஜனவரி மாதத்தில் 4 பேர்கொண்டு குடும்பம் ஒன்றின் மாத செலவு ஒரு இலட்சத்தி 4 ஆயிரத்து 851 ரூபாவாக கணக்கிட்டிருக்கிறது.

60 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதில் நூற்றுக்கு 39 சதவீதமே அவர்களின் உணவுப்பொருட்களுக்காக செலவிடப்படுகிறது. நூற்றுக்கு 60 வீதம் உணவு அல்லாத பொருட்களுக்கு செலவிடப்படுகிறது.

அதேபோன்று கொழும்பு விலைச்சுட்டெண்ணின் பிரகாரம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  4பேர்கொண்ட குடும்பத்தின் மாத செலவு  79 ஆயிரத்து 923 ரூபா. அதேநேரம் 2025 பெப்ரவரி மாதத்தில் 4 பேர் கொண்ட குடும்பம் ஒன்றின் செலவு ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 409 ரூபா. இது மக்களால் தாங்கிக்கொள்ளக்கூடிய தொகை அல்ல.

இதில் மக்கள் தங்களின் உணவு தேவைக்கு செலவிடுவது நூற்றுக்கு 26 சதவீதமாகும். நூற்றுக்கு 74 சதவீதம் உணவு அல்லாத தேவைக்கு செலவிடப்படுகிறது. இது மிகவும் பயங்கரமான நிலைமை. இந்த நிலைமையில் எதிர்காலத்தில் சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

ஏனெனில் மக்களின் தேவைகள் அதிகரிக்கும்போது அவர்கள் உணவு பொருட்கள் தேவையையே குறைத்துக்கொள்கின்றனர். மக்களுக்கு மினசாரம், குடிநீர் கட்டணங்கள், பிள்ளைகளின் மேலதிக வகுப்பு கட்டணம், தொலைபேசி கட்டணம் மருந்து பொருட்களின் கட்டணம்.

போக்குவரத்து கட்டணங்களை குறைத்துக்கொள்ள முடியாது. அதனால் மக்கள் தங்களின் உணவு வேளையை குறைத்துக்கொண்டும் மலிவான உணவுப்பொருட்களை கொள்வனவு செய்யவும் தூண்டப்படுகின்றனர். அதனால் பல்வேறு சுகாதார பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.

சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையின் பிரகாரம் 2022 ஆம் ஆண்டில் 5 வயதுக்கு குறைந்த  சிறுவர்களின் வயதுக்கு ஏற்ற உயரம் குறைவு நூற்றுக்கு 9,2 வீதம் 2023 இல் அது நூற்றுக்கு 10,3 சதவீதமாகும். அதேபோன்று உயரத்துக்கு ஏற்ற நிறை குறைவு 2022 இல் நூற்றுக்கு 10.2 சதவீதமாகும். 2023 இல் நூற்றுக்கு 10 சதவீதமாகும்.

அதனால் வாழ்க்கைச்செலவு அதிகரித்துள்ளதன் காரணமாக மக்கள் தங்களின் அன்றாட தேவைகளை ஒருபோதும் குறைத்துக்கொள்ளப்போவதில்லை. மாறாக அவர்கள் 3 வேளை உணவு 2 வேளையாக குறைத்துக்கொள்வார்கள். அதேபோன்று விலைகுறைந்த உணவுப்பொருட்களையே உணவுக்கு எடுத்துக்கொள்ள முயற்சிப்பார்கள்.

அதனால் அரசாங்கம் தேர்தல் மேடைகளில் மக்களுக்கு அளித்த வாக்குறுதியின் பிரகாரம் அத்தியாவசிய பொருட்களின் வரிகளை குறைத்து, மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51