ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை பாராளுமன்றம் என்பவற்றுக்கிடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தி எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மென் மொரினோ மற்றும் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மென் மொரினோ (Carmen Moreno) கடந்த திங்கட்கிழமை (17) இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார்.
இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
அத்துடன், இங்கு கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்,
இலங்கையின் புதிய அரசியல் மற்றம் மற்றும் புதிய அரசியல் கலாசாரம் தொடர்பில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை, சுற்றுலாத் துறை போன்ற துறைகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்கின்றமை குறித்தும் இதன்போது மேலும் கலந்துரையாடப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM