8 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு 2550 ரூபா நிவாரணப் பொதிக்கு அமைச்சரவை அனுமதி - அமைச்சர் வசந்த சமரசிங்க

19 Mar, 2025 | 09:51 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் 8 இலட்சத்து  33 ஆயிரம் மக்களுக்கு 5000 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை 2,550 ரூபா அடிப்படையில் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (19) இடம்பெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின்  வர்த்தக, வாணிப, உணவுப்பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில்  உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.நளின் பண்டார எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார் .

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வசதி குறைந்த மக்களுக்கு நிவாரண பொதி ஒன்றை சதொச ஊடாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதற்காக ஒதுக்கப்பட்டிருந்த  1,000 மில்லியன் ரூபாவை 1500 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கு  வேண்டுகோள் முன் வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் அது கலந்துரையாடப்பட்டு  வெள்ளிக்கிழமை (20) நிதியமைச்சு அந்த திருத்தத்தை மேற்கொள்ளும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அந்த வகையில் இந்த உணவுப் பொதிகள் யாருக்கு வழங்கப்படுகிறது என்பது தொடர்பில் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

நாட்டில் 1.7 மில்லியன் மக்களுக்கு அஸ்வெசும வழங்கப்படுகிறது. மேலும் 8 இலட்சத்து 33,000 மக்கள் அஸ்வெசும  கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பித்து விட்டு காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர்.

அமைச்சரவையின் தீர்மானத்தின்படி 5,000 ரூபா பெறுமதியான இந்த உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி  2500 ரூபா என்ற மானிய விலையில் அவ்வாறு காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்களுக்கே வழங்கப்படவுள்ளது. அவர்களின் தகவல்கள் எம்மிடம் இருக்கின்றன.

ச.தொ.ச. விற்பனை நிலையங்கள் மூலமே இந்த நிவாரண பொதி வழங்கப்படவுள்ளது. அந்த நிறுவனம் கொள்வனவு விலைக்கே இந்த பொருட்களை வழங்குவதுடன் 700 ரூபா பங்களிப்பையும் செய்கிறது. மீதம் 1,800 ரூபாவை அரசாங்கம் வழங்குகின்றது.

ச.தொ.ச. நிறுவனம் அதற்காக விநியோகஸ்தர்களிடமிருந்து கேள்வி கோரல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நாம் திறைசேரியில் அதற்கான நிதியை கோரியுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51