(எம்.மனோசித்ரா)
உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததன் பின்னர் சுயாதீன குழுக்களுக்கான சின்னங்கள் வழங்கப்படும். அமைதியான முறையில் இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களிடம் கோரிக்கை விடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் புதன்கிழமை (19) நண்பகல் 12 மணியோடு நிறைவடைந்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று வியாழக்கிழமை (20) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இறுதி நேரம் வரை பார்த்துக் கொண்டிருக்காமல் முடிந்தளவு விரைவாக வேட்புமனுக்களை தாக்கல் செய்யுமாறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
வேட்புமனுக்களுடன் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களை தவறுகள் எதுவும் இன்றி மிகுந்த அவதானத்துடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அவ்வாறில்லை எனில் இறுதி நேரத்தில் அவற்றை நிராகரிக்க வேண்டியேற்படும். அதேவேளை கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் சார்பில் தகுதியானவர்களே அவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பாக வேட்புமனுக்களுடன் வேட்பாளர்களது சொத்து விபரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும். இதற்காக தெரிவத்தாட்சி அலுவலகங்களில் விசேட ஆலோசனை சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததன் பின்னர் சுயாதீன குழுக்களுக்கான சின்னங்கள் வழங்கப்படும். அதிகளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும்பட்சத்தில் இதனை அறிவிப்பதில் சற்று தாமதம் ஏற்படும்.
எனவே அதிகாரமுள்ளோருக்கு மாத்திரம் குறித்த இடத்திலிருப்பதற்கு வாய்ப்பளிக்கப்படும். வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததன் பின்னர் அரசியல் கூட்டங்கள், பேரணிகள், வாகனப் பேரணிகள் நடத்தப்படக் கூடாது. அவ்வாறு நடத்தப்படும் பட்சத்தில் தேர்தல் சட்டத்துக்கமைய அவை சட்ட விரோதமானவையாகவே கருதப்படும்.
அமைதியான முறையில் இவற்றை முன்னெடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சகல தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.
அதேவேளை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கும் எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM