அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி' பட அப்டேட்

19 Mar, 2025 | 04:02 PM
image

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற 'ஓ ஜி சம்பவம்' எனும் பெயரிலான பாடலும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப் படத்தில் த்ரிஷா, பிரசன்னா, பிரபு, அர்ஜூன் தாஸ்,யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். 

எக்சன் என்டர்டெயினராக உருவாகியிருக்கும் இப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரிஸ் பிலிம்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி - வை.ரவிசங்கர் - குல்சன் குமார் - பூசன் குமார் - கிரிஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தின் டீசர் வெளியாகி முப்பத்திரண்டு மில்லியனுக்கும் அதிக பார்வைகளைக் கடந்தது. 

இந்நிலையில் இப் படத்தில் இடம்பெற்ற திரையரங்கம் சிதறட்டும் எனத் தொடங்கும் பாடலும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியானது.  இப் பாடலை பாடலாசிரியர் விஷ்ணு எடவன் எழுத, ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். 

துள்ளல் இசையாக உருவாகியிருக்கும் இப் பாடல் குறுகிய காலத்துக்குள் ஏழுமில்லியனுக்கும் அதிக பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right