இன்றைய சூழலில் எம்மில் பலரும் தகவல் தொழில்நுட்பத் துறையின் அசுர வளர்ச்சியினால் உறங்கும் நேரத்தை வெகுவாக குறைத்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக, இன்றைய திகதியில் இரண்டு வயது பிள்ளை முதல் எண்பது வயது முதியவர் வரை கைப்பேசி என்பது அவர்களது ஆறாவது விரலாகவே மாறிவிட்டது.
இதனால் சமூக வலைத்தள பக்கங்களில் உலாவும் நேரம் அதிகமாகவும் உழைக்கும் நேரம் குறைவாகவும் உறங்கும் நேரத்தை அதைவிட குறைவாகவும் வடிவமைத்துக் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக விவரிக்க இயலாத அல்லது காரணங்களை துல்லியமாக அவதானிக்க இயலாத பல வகையினதான உடலியல் சார்ந்த மற்றும் உளவியல் சார்ந்த தொல்லைகளை எதிர்கொள்கிறோம். இந்தத் தருணத்தில் வைத்திய நிபுணர்கள் உறக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்குங்கள் என உரக்க எச்சரிக்கை செய்கிறார்கள்.
கடந்த தசாப்தங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை உறக்கம் என்பது அனைவருக்கும் இருக்கும். சிலர் அதிகாலை 4 மணிக்கு எழுந்து இரவு 8.00 மணிக்கு உறங்கச் சென்று விடுவார்கள். இவர்கள் தங்களின் ஆயுள் முழுவதும் சுகவீனம் ஏதும் ஏற்படாமல் நினைவு தடுமாற்றத்துக்கு ஆளாகாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து மரணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். ஆனால், இன்றைய சூழலில் இருபது வயது இளைஞனும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கிறார். இதற்கு முதன்மையான காரணம் உறக்கமின்னை தான் அல்லது உறக்கம் தொடர்பான கோளாறு தான்.
உறக்கம் ஏன்அவசியம் என்றால், உறங்கும்போது நமது உடல் உறுப்புகள் ஓய்வு மட்டும் எடுத்துக் கொள்வதில்லை. சேதமடைந்த திசுக்கள் மற்றும் செல்கள் தங்களை புதுப்பித்துக் கொள்கின்றன. எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தின் திறனை மேம்படுத்திக் கொள்கின்றன. சுரப்பிகளின் சமச்சீரற்ற தன்மையை சீராக்குகின்றன. மன நலத்தை பாதிக்கும் காரணிகளை சீரமைக்கவும் உதவுகின்றன. இத்தனை பணிகளும் நீங்கள் உறங்கும்போது உங்களுடைய உடல் மேற்கொள்வதால் தூக்கத்துக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் வழங்க வேண்டும் என வைத்தியர்கள் தெளிவாக எடுத்துரைக்கிறார்கள்.
இதனால் நாளாந்தம் ஆறு மணித்தியாலத்திலிருந்து எட்டு மணித்தியாலம் வரை உறங்குவதையும் ஒரே தருணத்தில் அதாவது, இரவு நேரத்தில் உறங்குவதையும் வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என வைத்திய நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதன் மூலம் உறக்கம் சார்ந்த கோளாறுகள் வராமல் தற்காத்துக்கொள்ள இயலும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
வைத்திய ராமகிருஷ்ணன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM