பல வருடங்களாக காணாமல்போயுள்ள வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஒருவரை கண்டுபிடிக்க பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
புத்தளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றிய அதிகாரி ஒருவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
இது தொடர்பில், காணாமல்போன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியின் மனைவி கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ள நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்திலும் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் காணாமல்போயுள்ள வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
காணாமல்போயுள்ள வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியின் விபரங்கள்;
1. பெயர் - அதபத்து முதியன்சேலாகே சுமேத புத்ததாச
2. வயது - 47
3. முகவரி - இல. 545/11/08, குணசேகர மாவத்தை ,மல்வத்தை, நிட்டம்புவ
இந்த புகைப்படத்தில் உள்ள தந்தை தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 071 - 8594912 அல்லது 011 – 2392900 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM