இன்றைய சூழலில் எம்மில் பலரும் வெற்றி என்ற ஒற்றை இலக்கை நிர்ணயித்துக் கொண்டு பயணிக்கிறார்கள். கடந்த காலத்தில் பெற்ற அனுபவங்களின் துணை கொண்டு நிகழ் காலத்தையும் எதிர் காலத்தையும் துல்லியமாக அவதானித்து, தங்களின் வெற்றிக்கான பாதையை உருவாக்கி பயணிக்கும் பலருக்கும் வெற்றி என்பது எளிதில் கிடைக்காத ஒன்றாக இருக்கிறது. இதில் நம் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை. அதே தருணத்தில் ஆன்மீக அன்பர்கள் முன்னிறுத்தும் சூட்சுமத்தை மட்டும் பின்பற்றத் தொடங்கினால் வெற்றி உறுதியாகக் கிடைக்கும்.
இதற்குத் தேவை : வெற்றிலை + பாக்கு
அரசாங்கத்தின் அணுசரணைக்காக உயர் அதிகாரிகளை சந்திக்கும்போது ஆவணங்களை எடுத்துச் செல்வதுடன் உங்களது பையில் இரண்டு வெற்றிலை, ஒரு பாக்கு ஆகியவற்றை நன்றாகச் சுருட்டிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
அரசாங்க நிறுவனம் அல்லது தனியார் நிறுவனத்தில் வேலை பெறுவதற்கு நேர்காணலில் பங்குபற்றுகிறீர்கள் என்றால், உங்களது சிந்தனை கவனச் சிதறலில் இல்லாமல் உயர் அதிகாரிகள் கேட்கும் வினாவுக்கு தெளிவாகவும் அச்சமில்லாமலும் குழப்பம் எதுவும் இல்லாமலும் விடையளிக்க வேண்டும் என்றால் உங்களுடைய அனுபவ மற்றும் கற்ற அறிவுடன் பையில் வெற்றிலை பாக்கினையும் உடன் எடுத்துச் செல்லுங்கள். வேலை உறுதி.
திருமணத்துக்கு உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக தகுதி பெற்று தயாராகவும் இருந்தாலும் திருமணம் என்பது சாத்தியமாகாமல் தாமதமாகிக் கொண்டே இருக்கிறதா! கவலை வேண்டாம். அடுத்தமுறை வரன் பார்க்கும்போது உங்களுடைய பையில் பிரத்யேகமாக வெற்றிலை பாக்கினை வைத்துக்கொள்ளுங்கள். திருமணம் உறுதி.
இப்படி உங்கள் எண்ணங்களுக்கேற்ப வெற்றிலை பாக்கினை உடன் வைத்துக்கொண்டால் மகாலட்சுமி வாசம் செய்யும் வெற்றிலை உங்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி வெற்றியையும் மகிழ்ச்சியையும் வழங்குவார்.
பொதுவாக இத்தகைய காரிய சித்திக்காக வெற்றிலை பாக்கினை எடுத்துச் செல்லும்போது 51 என்ற எண்ணிக்கையிலான வெற்றிலையும் 11 என்ற எண்ணிக்கையிலான பாக்கினையும் உடன் வைத்துக்கொண்டால் வெற்றி உறுதி என்ற சூட்சுமத்தையும் முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தொகுப்பு - சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM