மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 48.5 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இரவு இடம்பெற்ற விபத்தில் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று முன்னால் பயணித்த வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, வேனின் சாரிதியும் அதில் பயணித்த களனி பல்கலைக்கழக பேராசிரியர் உட்பட ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் களனி பல்கலைக்கழக பேராசிரியர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களனி பல்கலைக்கழக தத்துவ ஆய்வுகள் துறையின் உளவியல் பிரிவின் தலைவராகப் பணியாற்றிய 46 வயதுடைய பேராசிரியரே உயிரிழந்துள்ளார்.
இவர் தனது குடும்பத்தினருடன் இணைந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாச் சென்றுவிட்டு வேனில் மீண்டும் வீடு நோக்கி திரும்புகையிலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM