அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற இப்தார் நிகழ்வு

19 Mar, 2025 | 11:13 AM
image

நாடு எனும் ரீதியில் முன்னேறிச் செல்ல வேண்டுமாயின் பேதங்களை மறந்து அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான, வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளதோடு கலாச்சார நிகழ்வுகள் இனங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த வழிவகுப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (18) முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டே அவர் இதனை தெரிவித்தார்.

செய்தி ஒன்றின் நம்பகத்தன்மையினை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஊடகவியலாளர்களை சாரும் என்று நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்ட தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார். முஸ்லிம்களின் புனித வேத நூலான அல்குர்ஆனிலும் இது வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

இந் நிகழ்வானது, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார அவர்களின் பூரண வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் நாட்டில் முன்னணியில் திகழும் பல முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

முஸ்லிம் எய்ட் நிறுவனமும் கிண்ணியாவில் இயங்கும் குளோபல் எஹ்ஸான் ரிலீப் நிறுவனமும் நிகழ்விற்கு அனுசரணை வழங்கியிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பீலியடி நடன காளி அம்மன் ஆலயத்தின்...

2025-04-20 17:45:51
news-image

கொழும்பில் தேசிய மக்கள் சக்தியின் காரியாலயம்...

2025-04-19 17:40:29
news-image

 "காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்"...

2025-04-19 14:33:42
news-image

தமிழ்நாடு ஆளுநர் விருதைப் பெற்ற சொற்பொழிவாளர்...

2025-04-19 14:14:04
news-image

அன்னை பூபதியின் 37 ஆவது நினைவுதினம்...

2025-04-19 12:29:15
news-image

கொழும்பு விவேகானந்தா சபையின் ஆசிரிய வாண்மை...

2025-04-19 11:17:03
news-image

இலங்கையில் முதன் முறையாக நடைபெறவுள்ளது Media...

2025-04-18 11:57:34
news-image

அகிலமெங்கும் ஒலித்திடும் சிவநெறிய திருமுறை விண்ணப்பம்...

2025-04-17 17:42:43
news-image

தெஹிவளை விஷ்ணு கோயிலில் புதுவருட தின...

2025-04-17 15:55:25
news-image

ஜேர்மனியில் சர்வதேச விருது விழா

2025-04-17 18:58:20
news-image

'இயேசு ஜீவிக்கிறார்“ சர்வதேச சுவிசேஷ பணிமனையின்...

2025-04-16 12:54:39
news-image

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ முத்து...

2025-04-16 07:03:22