யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 81 குடும்பங்கள் தமக்குக் காணிகள் இல்லை என்றும், காணிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளில், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 27 குடும்பங்களும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 823 குடும்பங்களும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 796 குடும்பங்களும், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 2 ஆயிரத்து 828 குடும்பங்களும், மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 342 குடும்பங்களும், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 568 குடும்பங்களும், பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 730 குடும்பங்களும், வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவில் 456 குடும்பங்களும், நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்து 855 குடும்பங்களும், உடுவில் பிரதே செயலர் பிரிவில் ஆயிரத்து 176 குடும்பங்களும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 526 குடும்பங்களும், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 256 குடும்பங்களும், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 589 குடும்பங்களும், சங்கானை பிரதேச செயலர் பிரிவில் இருந்து 109 குடும்பங்களும் என யாழ். மாவட்டத்தில் 11 ஆயிரத்து 81 குடும்பங்கள் தமக்கு காணிகளை வழங் குமாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
இவற்றில், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் 2 குடும்பங்களுக்கும், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 38 குடும்பங்களுக்கும், வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் 22 குடும்பங்களுக்கும், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் 85 குடும்பங்களுக்கும், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 26 குடும்பங்களுக்கும், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 72 குடும்பங்களுக்கும் என மொத்தமாக 352 குடும்பங்களுக்கு இவ்வாறு காணிகள் வழங்கப்பட்டுள்ளன. 10 ஆயிரத்து 729 குடும்பங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM