பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பு : பாராளுமன்ற உரையை நேரடியாக ஒளிபரப்பவும் தடைவிதித்தார் சபாநாயகர் !

Published By: Digital Desk 3

19 Mar, 2025 | 05:09 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவினாவினால் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வந்துள்ள கூற்றுக்கள் தொடர்பாக மிக ஆழமாக ஆராய்ந்து, அவற்றை பரிசீலித்ததன் பின்னர் தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு சபாநாயகர் என்ற வகையில் எனக்களிக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இடம்பெறும் பாராளுமன்ற அமர்வுகளின்போது அவரின் எந்தவொரு கூற்றையும் செவிப்புல, கட்புல மற்றும் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒலி, ஒளிபரப்புச் செய்வதை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்டளையிடுகிறேன் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றம் புதன்கிழமை (19) கூடியபோது சபாநாயகரின் அறிவிப்பின்போதே அவர் இவ்வாறு உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக சபாநாயகர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, இந்தச் சபையிலும் சபைக்கு வெளியிலும் குறிப்பாக, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தனி நபர்களுக்கும், தனி நபர் குழுக்களுக்கும் மற்றும் பலதரப்பட்ட அமைப்புகளுக்கும் எதிராக மிகவும் இழிவான சொற்பதங்களைப் பிரயோகித்து மேற்கொண்டுள்ளதும் மேற்கொண்டு வருவதுமான சர்ச்சைக்குரிய மற்றும் இழிவுக்குட்படுத்தும் கூற்றுகளால், தனிப்பட்ட முறையில் பல்வேறு நபர்களுக்கும் பல்வேறு சமூக மற்றும் இனக் குழுமங்களுக்கும் மன அமைதியை குலைக்கும் நிலை ஏற்படுகின்றதென பல்வேறு வழிமுறைகளில் எனக்கு முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் குறித்து இந்தச் சபைக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, தனிப்பட்ட முறையில் பெண்கள் உட்பட பல்வேறு நபர்கள், பல்வேறு சமூக குழுக்கள் மற்றும் சமயக் குழுக்களை இலக்கு வைத்து முன்வைத்துள்ள பல்தரப்பட்ட, இழிவுக்குட்படுத்துகின்றதும் அநாகரிகமானதும் அத்தோடு கடுமையான சர்ச்சைகளுக்கு வித்திடுகின்றதுமான கூற்றுகள் சம்பந்தமாக பல்வேறு நபர்கள், பல்வேறு சமூக அமைப்புகள் அதேபோல், இந்தச் உயர் சபையை பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்க கட்சியையும் எதிர்க்கட்சியையும் சேர்ந்த பல மக்கள் பிரதிநிதிகள் உட்பட்ட பல்வேறு தரப்பினர் தனிப்பட்ட முறையில் என்னிடம் முறைப்பாடு செய்து அத்தகைய கூற்றுகள் சம்பந்தமாக அவர்களினது கடுமையான அதிருப்தியையும் கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர், இந்த உயர் சபையின் தலைவர் என்ற வகையில் அத்தகைய செயற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே என்னிடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள். எனும் விடயத்தை இச்சபைக்கு அறியத்தர விரும்புகிறேன்.

குறிப்பாக, இந்தச் உயர் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தனக்குரிய சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி, இந்தச் சபைக்கு வந்து பதிலளிக்க முடியாத தரப்பினர் சம்பந்தமாகவும் இச்சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய மக்கள் பிரதிநிதிகள் சம்பந்தமாகவும் அத்துடன் பிற பல்வேறு வெளிமட்ட சமூக மற்றும் சமய அமைப்புகள் உட்பட பல்வேறு இனக் குழுமங்களையும் இனப் பிரிவினரையும் இலக்கு வைத்து மிகவும் இழிவான சொற்பதங்களைப் பிரயோகித்து, அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றதும் அபகீர்த்தியை விளைவிக்கின்றதுமான கூற்றுகளுக்கு சபாநாயகர் என்ற வகையில் எனது கடுமையான அதிருப்தியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தச் உயர் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில், அவர் மேற்கொள்கின்ற இவ்வகையான இழிவுபடுத்தும் மற்றும் அநாகரிகமான கூற்றுகளால் சபையின் உயர் தன்மைக்கு பாரிய களங்கமும் அவமதிப்பும் ஏற்படுகிறது என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன். மேலும், இது தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாரிய குந்தக நிலையை ஏற்படுத்துகின்றது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில், இவ்வாறான கூற்றுகளைத் தவிர்க்குமாறு பல வழிகளில் கடிந்துரைத்தபோதிலும், அந்த அறிவுறுத்தல்களை ஏற்று நடப்பதற்கு குறித்த பாராளுமன்ற உறுப்பினர் முற்றாகத் தவறியிருப்பதனையும் நான் அவதானிக்கின்றேன்.

குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் இத்தகைய செயற்பாடுகள் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் ஏற்பாடுகள், பாராளுமன்ற (தத்துவங்களும் சிறப்புரிமைகளும்) சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவையின் ஏற்பாடுகள் மற்றும் தொன்றுதொட்டு பேணப்பட்டு வருகின்ற தொன்மையான பாராளுமன்ற மரபுகள் ஆகியவற்றுக்கு முற்றிலும் முரணாகவும் இசைந்தொழுகாத வகையிலும் இருக்கின்றதென இங்கு விசேடமாக வலியுறுத்திக்கூற விரும்புகிறேன்.

தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினர்  (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா வினால் முன்வைக்கப்படும் இக்கூற்றுக்கள் தொடர்பாக மிக ஆழமாக ஆராய்ந்து, அவற்றை பரிசீலித்ததன் பின்னர் அதன் மூலம் தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, நிலையியற் கட்டளை ஏற்பாடுகளின் பிரகாரம், சபாநாயகர் என்ற வகையில் எனக்களிக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம், 2025ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 20 மற்றும் 21ஆம் திகதிகளிலும், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08, 09 மற்றும் 10ஆம் திகதிகளிலும், 2025 ஆம் ஆண்டு மே மாதம் 06, 07 மற்றும் 08ஆம் திகதிகளிலும் என மொத்தமாக எட்டு  நாட்கள் நடைபெற உள்ள பாராளுமன்ற அமர்வுகளின்போது, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் எந்தவொரு கூற்றையும் செவிப்புல, கட்புல மற்றும் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒலி, ஒளிபரப்புச் செய்வதை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்டளையிடுகிறேன்.

மேலும், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப, அவ்வாறான இழிவுக்குட்படுத்தும், அநாகரிகமான மற்றும் கீழ்த்தரமான சொற்பதங்களைப் பிரயோகித்து, பாராளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்படும் அனைத்து கூற்றுக்களையும் ஹன்சாட் அறிக்கையிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என இந்த உயர் சபைக்கு அறியத்தர விரும்புகிறேன்.

அத்துடன், இவ்வாறு நேரடி ஒலி, ஒளிபரப்பை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் காலப்பகுதியில், பாராளுமன்ற உறுப்பினர் ஆற்றும் உரைகளின் உள்ளடக்கம் மற்றும் தெரிவிக்கப்படும் கூற்றுக்கள் சம்பந்தமாக ஆராய்ந்து, இத்தற்காலிக தடையை நீக்குவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; வேட்புமனுக்கள்...

2025-04-21 13:02:16
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் தாயும்...

2025-04-21 12:19:26
news-image

மின்னல் தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய்...

2025-04-21 11:53:04
news-image

யாழ். மரியன்னை பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு...

2025-04-21 12:27:15
news-image

ஹொரவ்பொத்தானையில் வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-04-21 11:27:32
news-image

பண்டாரவளை- பூனாகலை பிரதான வீதியில் மண்சரிவு!

2025-04-21 12:28:06
news-image

சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவு...

2025-04-21 12:27:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு உச்சபட்ச...

2025-04-21 12:04:08
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைக்கு...

2025-04-21 12:03:11
news-image

update ; கெப் வண்டி விபத்து...

2025-04-21 12:13:38
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-04-21 11:59:15
news-image

மட்டக்களப்பு சீயோன் தேவாலய குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின்...

2025-04-21 11:29:24