இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரும், நிலைபேறான போக்குவரத்தின் முன்னோடியுமான Tata Motors மற்றும் 85 ஆண்டுகளுக்கும் மேலாக வாகனம் தொடர்பான விசேடத்துவத்தை கொண்ட இலங்கையில் Tata Motors இன் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்டவிநியோகஸ்தருமான DIMO நிறுவனத்துடன் இணைந்து, உள்ளூர் சந்தையில் புதிய பயணிகள் வாகனங்களை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அறிமுக நிகழ்வில் Tata Motors நிறுவனத்தின் வெற்றிகரமான SUV வரிசையானTata Punch, Tata Nexon, and the Tata Curvv ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் மின்சார வாகன வகைகளான, Tiago.ev, Punch.ev, Nexon.ev, Curvv.evஆகியவற்றையும் இந்நிகழ்வில் Tata Motors அறிமுகப்படுத்தியுள்ளது.
Tata Passenger Electric Mobility Ltd நிறுவனத்தின் சர்வதேச வணிகத்தலைவர் YashKhandelwal இது பற்றி கருத்து வெளியிடுகையில்,“எமது சர்வதேச வணிக உத்தியில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் வகையில் நாம் இலங்கையில் எமது பயணத்தை தொடர்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
பலவருடங்களாக Tata Motors முக்கியமாற்றங்களுக்குஉட்பட்டுள்ளது. அந்தவகையில்எமதுமீள்வருகையைஎமதுபுதிய, புரட்சிகரமான தயாரிப்பு வகைகள் மூலம் எடுத்துக் காட்டுவதைத் தவிர சிறந்த வழிஎ துவுமில்லை. எமது தயாரிப்புகள் இலங்கை சந்தையை கவரும் வகையில் மாத்திரமன்றி, உறுதியான வடிவமைப்பு, அதிநவீனஅம்சங்கள், உயர்மட்டபாதுகாப்புமற்றும் ஒப்பிடமுடியாத விற்பனைக்குப் பின்னரான ஆதரவு ஆகியவற்றை இணைத்து புதியதரநிலைகளை அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எமது புகழ்பெற்ற SUV களுடன், Tiago.evஇனைஅறிமுகப்படுத்துவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.”என்றார்.
DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ்பண்டிதகே தெரிவிக்கையில்,
புத்தம் புதிய Tata பயணிகள் வாகன வகைகள், வாகனத்துறையில் புதிய தரநிலைகளை அமைக்கிறது. புத்தாக்கம், பாதுகாப்பு, நிலைபேறான தன்மையை மிகவும் கட்டுப்படியான விலையில் அவை உள்ளடக்கியுள்ளது.
DIMOநிறுவனத்தின் ஒப்பிட முடியாத விற்பனைக்குப் பிந்தைய நிபுணத்துவ ஆதரவுடன், சிறந்தசேவை மற்றும் ஒத்துழைப்புடன் ஒப்பிட முடியாத வாகன உரிமைதொடர்பானஅனுபவத்தைநாம் உறுதி செய்வதோடு, இலங்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்து விளங்க வேண்டுமென்பது தொடர்பான எமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM