பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

19 Mar, 2025 | 10:08 AM
image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் ஹோமாகம கலவிலவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கோனபால பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார். 

சந்தேக நபர் அவிசாவளை பகுதியில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உட்பட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ்...

2025-04-22 23:28:46
news-image

தபால் மூல வாக்களிப்பின் போது அரச...

2025-04-22 20:33:09
news-image

பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு...

2025-04-22 17:33:04
news-image

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயம்!

2025-04-22 21:53:35
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும்...

2025-04-22 17:23:42
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும்...

2025-04-22 17:27:08
news-image

மாத்தறை சிறையில் குழப்பம் : அதிகாரிகள்...

2025-04-22 21:21:49
news-image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2025-04-22 21:37:42
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-04-22 20:39:13
news-image

யாழ் . மாநகர சபையில் யாருக்கு...

2025-04-22 17:17:05
news-image

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகனை பார்க்கசென்ற தமிழ்...

2025-04-22 20:04:55
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின்...

2025-04-22 17:25:48