இராமேஸ்வரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால் கைது : தமிழக முதல்வர் வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் : போராட்டத்தில் மீனவர்கள் !

19 Mar, 2025 | 11:35 AM
image

இராமேஸ்வரம்  சென்னை: நெடுந்தீவு அருகே இராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நிறைவடைந்த நிலையில் இராமேஸ்வரம் மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்குச் சென்றனர்.

கென்னடி என்பவரது விசைப்படகை இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு அருகே சிறைபிடித்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் சங்கர் அர்ஜுனன் தர்ம முனியாண்டி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவபிரதிநிதி பிரான்சிஸ் தலைமையில் மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்தும் இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் புதன்கிழமை (19)  ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் முதல் 20 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு 148 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தூதரக நடவடிக்கை: இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 2025-ம் ஆண்டின் 3 மாதங்களுக்குள் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் 10-வது சம்பவத்தை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். பாரம்பரிய மீன்பிடி பகுதியில் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவை என்று பலமுறை நான் வலியுறுத்தி கேட்டுக் கொண்ட போதிலும் இதுபோன்ற கவலையளிக்கக்கூடிய சம்பவங்களின் எண்ணிக்கை தொய்வின்றி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு மீன்பிடி தொழிலையே பெரிதும் நம்பியுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் அடிக்கடி இதுபோன்று சிறைபிடிக்கப்படுவதால் அவர்களது குடும்பத்தினர் வறுமையின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தமிழக மீனவர்கள் மேலும் கைது செய்யப்படாமல் தடுக்கவும் இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டு உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 110 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்கவும் வலுவான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ்...

2025-04-22 23:28:46
news-image

தபால் மூல வாக்களிப்பின் போது அரச...

2025-04-22 20:33:09
news-image

பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு...

2025-04-22 17:33:04
news-image

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயம்!

2025-04-22 21:53:35
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும்...

2025-04-22 17:23:42
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும்...

2025-04-22 17:27:08
news-image

மாத்தறை சிறையில் குழப்பம் : அதிகாரிகள்...

2025-04-22 21:21:49
news-image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2025-04-22 21:37:42
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-04-22 20:39:13
news-image

யாழ் . மாநகர சபையில் யாருக்கு...

2025-04-22 17:17:05
news-image

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகனை பார்க்கசென்ற தமிழ்...

2025-04-22 20:04:55
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின்...

2025-04-22 17:25:48