(நெவில் அன்தனி)
தாய்லாந்தின் ராஜமங்களம் விளையாட்டரங்கில் எதிர்வரும் 25ஆம் திகதி தாய்லாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள 2027 AFC ஆசிய கிண்ண தகுதிகாண் கால்பந்தாட்டத்தின் முன்றாவதும் கடைசியுமான சுற்றுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் அறிமுக வீரர்கள் மூவர் இடம்பெறுகின்றனர்.
இந்த தகுதிகாண் சுற்றுக்கு முன்னதாக லாஓஸ் அணிக்கு எதிராக சர்வதேச சிநேகபூர்வ (பயிற்சி) போட்டியில் இலங்கை வியாழக்கிழமை (20) விளையாடவுள்ளது. இதனை முன்னிட்டு இலங்கையில் இருந்து சுஜான் பெரேரா தலைமையிலான 9 வீரர்கள், தலைமைப் பயிற்றுநர் மற்றும் உதவியாளர்கள் லாஓஸை நேற்றுமுன்தினம் சென்றடைந்தனர்.
வெளிநாடுகளில் விளையாடிவரும் இலங்கை வம்சாவளியினரான 13 வீரர்கள் தத்தமது நாடுகளிலிருந்து லாஓசை சென்றைடந்து இலங்கை அணியினருடன் இணைந்துள்ளனர்.
இலங்கை அணியில் அறிமுக வீரர்களாக கெரத் கெலி, ஜெரெமி பெரெரா, வில்லியம் தோமாசன் ஆகிய மூவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த மூவரும் வெளிநாடுகளில் தொழில்முறை கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடி வரும் இலங்கை வம்சாவளியினராவர்.
மத்திய கள வீரர் கெரத் கெலி, இங்கிலாந்தில் 6ஆம் அடுக்கு லீக் போட்டியில் வெலிங் யுனைட்டட் கழகத்திற்காக விளையாடி வருகிறார்.
பின்கள வீரரான வில்லியம் தோமாசன், அவுஸ்திரேலிய லீக் கால்பந்தாட்டத்தில் எசெண்டன் றோயல்ஸ் கழகத்திற்காக விளையாடி வருகிறார்.
மற்றொரு மத்திய கள வீரரான 19 வயதுடைய ஜெரெமி பெரேரா TVS எர்லங்கன் கழகத்திற்காக 5ஆம் அடுக்கு ஜேர்மன் லீக் போட்டியில் விளையாடி வருகிறார்.
இலங்கை குழாத்தில் பெயரிடப்பட்டுள்ள 23 வீரர்களில் 13 வீரர்கள் வெளிநாடுகளில் விளையாடி வரும் இலங்கை வம்சாவளியினராவர். அவர்களில் வசீம் ராஸிக் மாத்திரமே உள்ளூர் கழகத்திற்காக விளையாடியுள்ளார்.
இந்த 13 வீரர்களைவிட மற்றைய 9 வீரர்களும் இலங்கையில் உள்ளவர்கள். அவர்களில் அணித் தலைவர் சுஜான் பெரேரா மாலைதீவுகளில் விளையாடி வருகிறார். மற்றைய வீரர்கள் உள்ளூர் கழகங்களில் இடம்பெறுகின்றபோதிலும் சுமார் 3 வருடங்களாக முதல்தர போட்டிகள் இடம்பெறாததால் அவர்கள் வெறுமனே பயிற்சிகளில் மாத்திரம் ஈடுபட்டு வருகின்றனர். படைத்தரப்பு கழகங்களில் இடம்பெறுவர்கள் உள்ளக போட்டிகளில் பங்குபற்றி வருகின்றனர்.
இதேவேளை, யேமனுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற சர்வதேச நட்புறவு போட்டிகளுக்கான இலங்கை குழாத்தில் இடம்பெற்ற மணரம் பெரேரா, பரத்தின் சகோதரர் ராகுல் சுரேஷ், செனால் சந்தேஷ், மொஹமத் ஆக்கிப், யாழ். மைந்தன் ஜூட் சுபன் ஆகியோர் தற்போதைய இலங்கை குழாத்தில் இடம்பெறவில்லை.
இலங்கை குழாம்
கோல்காப்பாளர்கள்: சுஜான் பெரேரா (தலைவர்), கவீஷ பெர்னாண்டோ, மொஹமத் முர்ஷித்.
பின்கள வீரர்கள்: அனுஜன் ராஜேந்திரம் (நோர்வே - ஸ்ட்ரைண்ட் TF கழகம்), ஜேசன் தயாபரன் (ஜேர்மனி - எய்ன்ட்ரெக்ட் ட்ரையர் கழகம்), ஜெக் ஹிங்கேர்ட் (அவுஸ்திரேலியா - ப்றிஸ்பேன் ரோர் கழகம்), குளோடியோ மத்தாயஸ் கெமனெச் (ஜேர்மனி - டைனமோ ட்ரெஸ்டன் கழகம்), வில்லியம் தோமாசன் (அவுஸ்திரேலியா - எசெண்டன் றோயல்ஸ் கழகம்), உள்ளூர் வீரர்களான சலன சமீர, ஷர்ஷா பெர்னாண்டோ.
மத்திய கள வீரர்கள்: பரத் சுரேஷ் அன்தனி (இலங்கையில் பிறந்தவர் - அவுஸ்திரேலியா - லெங்வொரின் கழகம்), ஆதவன் ராஜமோகன் கோவிந்தராஜா (சுவீடன் - IFK ஹனிங் கழகம்), மணிமெல்துர லியோன் பெரேரா (ஜெர்மனி - லூனேபேர்கர் LSK ஹன்சா கழகம்), கெரட் கிறிஸ்டோபர் கெலி (இங்கிலாந்து - வெலிங் யுனைட்டட்), ஜெரெமி பெரேரா (ஜேர்மனி - FTVS எர்லங்கன் கழகம்) உள்ளூர் வீரர்களான மொஹமத் அமான் பைஸர், மொஹமத் ஹஸ்மீர், ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரியின் நட்சத்திர வீரர் மொஹமத் தில்ஹாம்.
முன்கள வீரர்கள்: சமுவேல் (சாம்) ஜோசப் டேவிட் டுரன்ட் (இங்கிலாந்து - கொன்னாஸ் குவெ நொமேட்ஸ் கழகம்), அஹ்மத் வசீம் ராஸிக் (ஹொங்கொங் - ஈஸ்டன் டிஸ்ட்ரிக்ட் கழகம்), வேட் டெக்கர் (அவுஸ்திரேலியா - டெண்டிநொங் தண்டர் கழகம்), ஒலிவர் ஜேம்ஸ் கெலாட் டொரஸ் (அவுஸ்திரேலியா - விக்டோரியா ஹியூம் சிட்டி கழகம்) உள்ளூர் வீரர் மொஹமத் ரிப்கான்.
இலங்கை அணிக்கு அப்துல்லா அல்முத்தய்ரி தலைமை பயிற்றுநராக செயற்படுகிறார்.
லாஓஸ் அணிக்கு எதிராக வியன்டியன் விளையாட்டரங்கில் பயிற்சிப் போட்டியில் வியாழக்கிழமை (20) விளையாடவுள்ள இலங்கை அணியினர் அப் போட்டி முடிவடைந்ததும் அங்கிருந்து தாய்லாந்து புறப்பட்டுச் செல்வர்.
சர்வதேச கால்பந்தாட்ட தரவரிசையில் தாய்லாந்து 97ஆவது இடத்திலும் இலங்கை 200ஆவது இடத்திலும் இருக்கின்றன.
ஆனால், 'தரவரிசை என்பது வெறும் இலக்கம் மட்டுமே. போட்டி நடைபெறும் தினத்தில் எந்த அணி திறமையாக விளையாடுகின்றதோ அந்த அணியே ஜெயிக்கும். வெற்றியை நோக்கி இலங்கை அணியைத் தயார்படுத்தியுள்ளேன்' என அணி பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரி கூறினார்.
இது இவ்வாறிருக்க, சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் இலங்கை அணி திருப்பங்களை ஏற்படுத்தும் நாட்கள் தொலைவில் இல்லை என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM