(நெவில் அன்தனி)
இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் 1-1 என சம நிலையில் முடிவடைந்த 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரின் நாயகியாக சமரி அத்தபத்து தெரிவானார்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது. அப் போட்டியில் சமரி அத்தப்பத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியதுடன் 64 ஓட்டங்களைப் பெற்றார்.
இரண்டாவது போட்டியில் நியூஸிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்களால் வெற்றிபெற்று தொடரை 1 - 1 என சமப்படுத்தியது.
அப் போட்டியில் சமரி அத்தபத்து 23 ஓட்டங்களைப் பெற்றார்.
டனேடின் பல்கலைக்கழக ஓவல் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற கடைசிப் போட்டி மழையினால் கைவிடப்பட்டது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து மகளிர் அணி 14.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 101 ஓட்டங்களுடன் பலமான நிலையில் இருந்தபோது கடும் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.
துடுப்பாட்டத்தில் சுசி பேட்ஸ் 31 ஓட்டங்களையும் ஜோர்ஜியா ப்ளிம்மர் ஆட்டம் இழக்காமல் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.
சமரி அத்தபத்து 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இந்தத் தொடரில் 87 ஓட்டங்களை மொத்தமாக பெற்ற சமரி அத்தபத்து 2 விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தார். இதற்கு அமைய அவர் தொடர்நாயகியாகத் தெரிவானார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM