(நெவில் அன்தனி)
இலங்கையில் கூடைப்பந்தாட்ட விளையாட்டில் இளம் வீர, வீராங்கனைகளையும் பயிற்றுநர்களையும் எழுச்சிபெறச் செய்யும் Be Sri Lankan Basketball Camp (பி ஸ்ரீலங்கன் கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம்) 2025 கொழும்பு சுகததாச கூடைப்பந்தாட்ட அரங்கில் நாளை புதன்கிழமை (19) முதல் நான்கு தினங்களுக்கு நடைபெறவுள்ளது.
(படப்பிடிப்பு: எஸ். சுரேந்திரன்)
பி ஸ்ரீலங்கன் பாஸ்கட்போல் ஸ்தாபகரும் பிரபல கூடைப்பந்தாட்ட பயிற்றுநருமான கேஷவ் பெரேராவினால் பி ஸ்ரீலங்கன் பாஸ்கட்போல் காம்ப் (கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவரது அழைப்பை ஏற்று அமெரிக்காவில் பிரசித்திபெற்ற கூடைப்பந்தாட்டப் பயிற்றுநரான டொன் ஷோவோல்டர், அமெரிக்க தேசிய கூடைப்பந்தாட்ட சங்க தொழில்முறை வீரர் டோனி டவ்ன்செண்ட் ஆகிய இருவரும் இந்த பயிற்சி முகாமை நடத்தவுள்ளனர்.
இது தொடர்பான ஊடக சந்திப்பு சினமன் க்ராண்ட் ஹோட்டலில் இன்று (18) பிற்பகல் நடைபெற்றது.
'முதல் நாளான புதன்கிழமையன்று (19) இலங்கை முழுவதும் உள்ள கூடைப்பந்தாட்டப் பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அடுத்த மூன்று தினங்களுக்கு பாடசாலை வீர, வீராங்கனைகள் உட்பட சுமார் 80 பேருக்கு கட்டம் கட்டமாக பயிற்சிகள் வழங்கப்படும்' என 'வீரகேசரி ஒன்லைன்' எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் பி ஸ்ரீலங்கன் பாஸ்கட்போல் ஸ்தாபகர் கேஷவ் பெரேரா தெரிவித்தார்.
தொடர்ந்து விளக்கம் அளித்த அவர்,
'இலங்கை கூடைப்பந்தாட்டம் பல்லாண்டுகளுக்கு முன்னர் மிக உயரிய நிலையில் இருந்தது. ஆனால் இப்போது கிடுகிடுவென வீழ்ந்துவிட்டது. வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் கூடைப்பந்தாட்டத்தையும் கூடைப்பந்தாட்ட வீர, வீராங்கனைகளையும் மீண்டும் உயரிய நிலைக்கு கொண்டுசெல்லவேண்டும் என்ற குறிக்கோளுடனேயே இந்தப் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
'அத்துடன் இலங்கையிலுள்ள கூடைப்பந்தாட்ட பயிற்றுநர்களுக்கும் முன்னேற்றிவரும் வீர, வீராங்கனைகளுக்கும் ஐக்கிய அமெரிக்காவில் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் விசேட பயிற்சிகள் பெறுவதற்கான வாய்ப்புகளை எதிர்காலத்தில் உருவாக்கிக் கொடுக்கவும் எமது நிறுவனம் முயற்சிகளை எடுத்து வருகிறது' என்றார்.
இதேவேளை, 'இந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த பயிற்சி முகாம் தெற்காசியாவில் நடத்தப்படுவது இதுவே முதல் தடவை' என கூறிய அமெரிக்க தேசிய அணியின் பயிற்றுநரான டொன் ஷோவோல்டர், 'வாழ்நாளில் ஒரு தடவை மாத்திரம் கிடைக்கும் இத்தகைய வாய்ப்பை இலங்கையர் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். எனவே இந்த முகாமல் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன்' என்றார்.
'இந்தப் பயிற்சிமுகாமின்போது கூடைப்பந்தாட்ட நுட்பங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும். எனவே இலங்கையில் கூடைப்பந்தாட்ட விளையாட்டின் தரத்தை உயர்த்தும் முதலாவது நபர்களாக பயிற்சி முகாமில் பங்குபற்றுபவர்கள் இருக்கவேண்டும். இலங்கைக்கான எனது இந்த முதலாவது பயணத்தில் கூடைபந்தாட்ட விளையாட்டில் சிறந்த பயிற்றுநர்களையும் வீர, வீராங்கனைகளையும் உருவாக்குவதே எனது நோக்கம்' என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையிலுள்ள கூடைப்பந்தாட்ட வீர, வீராங்கனைகளை எழுச்சிபெறச் செய்வதே இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுவதன் ஒரே நோக்கம் என டோனி டவ்ன்செண்ட் கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கு சினமன் கிராண்ட் ஹோட்டல், சோலார் பூஸ் பிறைவேட் லிமிட்டெட் இன்னும் பல நிறுவனங்கள் அனுசரணை வழங்குதாக ஜே ஜே என அனைவராலும் விரும்பி அழைக்கப்படும் கேஷவ பெரேரா தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM