வெற்றிகரமாக நிறைவடைந்த 'கூலி' திரைப்பட படப்பிடிப்பு

19 Mar, 2025 | 04:06 PM
image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் தயாராகி வரும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு பிரத்யேக காணொளியொன்றினை வெளியிட்டுள்ளது. 

இத் திரைப்படத்தில் ரஜினிகாந்த், நாகர்ஜூனா,சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். அத்துடன் பொலிவுட் நடிகர் அமீர் கான் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 

எக்சன் த்ரில்லராக உருவாகும் இத் திரைப்படத்துக்கு அனிருத் இசையமைததுள்ளார். 

பல பாகங்களாக நடைபெற்று வந்த இப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

படத்தின் புதிய காணொளி தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right