மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன லேசர் சிகிச்சை

18 Mar, 2025 | 05:35 PM
image

உலகத்தில் ஐம்பது சதவீதத்திலிருந்து அறுபது சதவீத மக்கள் வாழ்வில் ஒரு முறையேனும் 'பைல்ஸ்' என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் மூல வியாதி பாதிப்புக்கு ஆளாகுவதாகவும் இதில் பெரும்பான்மையானவர்கள் சிகிச்சைக்குப் பிறகு முழுமையான நிவாரணத்தை பெறுவதாகவும் ஆய்வுகள் மூலம் கண்டறிப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மூல வியாதிக்கு லேசர் முறையில் நவீன சிகிச்சை அறிமுகமாகி நல்ல பலனை அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

மூல நோய் என்பது மிகவும் பொதுவான தீங்கற்ற அனுரெக்டல் நோயாகும். உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களை இது பாதிக்கிறது.

மலத்தை வெளியேற்றும்போது கடுமையான அசெகரியத்தை உணர்வது, வலி, குருதியுடன் கூடிய மலம் வெளியேறுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு பைல்ஸ், ஃபிஸ்டுலா, அனல் ஃபிஷர் என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் பாதிப்புகள் இருக்கக்கூடும். மல குடலில் இருக்கும் மல்தை வெளியேற்றும் திசுக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் அந்த திசுக்கள் சேதமடைந்திருக்கிறது என்றும் புரிந்து கொள்ளலாம்.

இதற்கு மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து நவீன பாணியிலான மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்களுடன் அறிமுகமாகி இருக்கும் லேசர் சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் தருவர்.

இத்தகைய சிகிச்சையை மேற்கொள்ளும்போது தழும்புஏற்படுவதில்லை. விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம். குறைவான இரத்த இழப்பு, வலி குறைவு, தொற்று பாதிப்புகளும் குறைவு...என பல சாதகமான அம்சங்கள் இருப்பதால் தற்போது இத்தகைய பாதிப்புகளுக்கு லேசர் சிகிச்சை சிறந்த நிவாரணத்தை வழங்கி வருகிறது. 

வைத்தியர் பாரி முத்துக்குமார்

தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் அருந்துங்கள்…!

2025-04-21 13:10:31
news-image

மண்ணீரல் நரம்பு மறு சீரமைப்பு சிகிச்சை

2025-04-19 17:32:59
news-image

நீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுகள்

2025-04-19 15:47:07
news-image

பெரியனல் அப்ஸெஸ் : ஆசனவாயில் ஏற்படும்...

2025-04-18 18:33:58
news-image

பூஞ்சைகளை நுகர்வதால் ஆரோக்கியம் கெடலாம்

2025-04-18 17:44:44
news-image

தர்பூசணி விதையில் இவ்வளவு நன்மைகள் ஒளிந்திருக்கா?

2025-04-18 12:47:04
news-image

ஹைப்பர்ஸ்ப்ளெனிசம் எனும் மண்ணீரலில் ஏற்படும் பாதிப்பை...

2025-04-18 10:51:51
news-image

சிசேரியனுக்கு பின்னராக முதுகு வலி தீர்வு...

2025-04-18 12:52:24
news-image

புற்றுநோய் ஆபத்தை உருவாக்கும் ஞானப்பல்? 

2025-04-16 19:44:45
news-image

வெறும் 10 நாட்கள் போதும்… வித்தியாசத்தை...

2025-04-16 16:00:35
news-image

பயத்தில் நமது உடல் உறுப்புகள்..!

2025-04-16 15:34:29
news-image

சுவைக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் சிறந்தது கோணப்...

2025-04-16 12:55:52